For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி “குவிக்”கா ஏழுமலையானை தரிசிக்கலாம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

திருமலை: திருப்பதியில் ஏழுமலையானை சுமார் 2 மணி நேரத்துக்குள் 20 ஆயிரம் பக்தர்கள் எளிதாக தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூபாய் 300 விரைவு தரிசனம் இணையதள முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்த உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு, "திருமலையில் ரதசப்தமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 92 ஆயிரம் பக்தர்கள் அன்றைய தினம் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Now get darshan in Tirumala in two hours

மேலும், திருமலையில் நடைபெற்ற 7 வாகன சேவைகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

கடந்த சில நாள்களாக ரூபாய் 300 விரைவு தரிசன பக்தர்களுக்காக இணையதளத்தில் அளிக்கப்பட்டு வந்த 18 ஆயிரம் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படுகிறது.

இணையதள வசதியை தற்போது அனைவரும் பயன்படுத்திக் கொள்வதால் கூடுதலாக 2 ஆயிரம் டிக்கெட்டுகளை அளிக்க உள்ளனர்.

இதன் மூலம், 20 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை சுமார் 2 மணி நேரத்துக்குள் எளிதாக தரிசிக்க முடியும்" என்றார்.

English summary
All devotees visiting Tirumala can have darshan of Sri Venkateswara Swamy after a two-hour wait in the queue line within one month if the plans formulated by the Endowments Minister Pydikondala Manikyala Rao worked out.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X