For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் ‘நிக்சன்’ மோடி... சசிதரூரைத் தொடர்ந்து மோடியைப் பாராட்டிய ஜெய்ராம் ரமேஷ்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் ரிச்சர்டு நிக்சனாக உருவெடுக்கும் திறன் பெற்றவர் என பிரதமர் மோடியைப் புகழ்ந்துள்ளார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

Now Jairam Ramesh feels Narendra Modi could be India's Richard Nixon

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் தலைவர் மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் கையாளும் விதத்தைப் பார்த்தால், பிரதமர் மோடியிடம் அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்டு நிக்சனாக உருவெடுக்கும் திறன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இல்லாத வளைந்து கொடுக்கும் தன்மை மோடியிடம் உள்ளது என ஜெய்ராம் ரமேஷ் பாராட்டியுள்ளார்.

English summary
Congress leader Ramesh Ramesh believes Prime Minister Narendra Modi has the potential of emerging as 'India's Richard Nixon' in handling Pakistan and China because he enjoys the "flexibility" that his Congress predecessor lacked.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X