For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது ஒரு மிராகிள்.. ஜெயலலிதா நலமாகிவிட்டார்.. விரைவில் வீடு திரும்புவார்: சு.சுவாமி தகவல்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமடைந்துவிட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் எனவும், பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி நலமாக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனவும், பாஜக ராஜ்யசபா எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி நேற்று மதியம் வெளியிட்ட ஒரு டிவிட்டில், இத்தகவலை கூறியுள்ளார். "ஜெயலலிதாவின் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம். ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பிவிட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படியென்றால், அது ஒரு அதிசயம்" என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Now Swamy says Jayalalithaa will be discharged soon

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உடனேயே, அவரை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிப்பதுதான் நல்லது என கருத்து கூறியவர் சுப்பிரமணியன் சுவாமி. முதலில் அவரது கருத்தை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் லண்டனிலிருந்து டாக்டர் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டபோது, சுப்பிரமணியன் சுவாமிக்கு, ஜெயலலிதாவின் உடல் நல பிரச்சினையின் தீவிரம் குறித்து தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என சுப்பிரமணியன் சுவாமி கூறியதோடு, அது ஒரு அதிசய நிகழ்வு என வர்ணித்துள்ளார்.

English summary
Amidst all the speculation amidst Tamil Nadu Chief Minister, J Jayalalithaa's health, Rajya Sabha MP, Subramanian Swamy today tweeted that he had learnt that she may discharged soon. Swamy tweeted, J J Bhaktas should be happy because I learn that J J has got back her consciousness and may be discharged soon. If so, it is a miracle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X