For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி அரசு: மார்ச் 6-ல் பதவியேற்பு

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி அமைக்கிறது.

By Mathi
Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு மார் 6-ந் தேதி பதவியேற்கிறது. 2 இடங்களில் வென்ற பாஜகவும் இந்த கூட்டணி அரசில் இடம் பெறுகிறது.

மேகாலயா தேர்தலில் 21 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

NPP Allies Set to Form Govt in Meghalaya

ஆனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 31 எம்.எல்.ஏக்கள் தேவை. மறைந்த பி.ஏ. சங்மாவின் தேசிய மக்கள் கட்சி 19 இடங்களைப் பெற்றிருந்தது. தேசிய மக்கள் கட்சி உட்பட காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரின.

இதில் 2 இடங்களில் வென்ற பாஜகவும் அடங்கும். இந்த அணிக்கு மொத்தம் 29 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் தேவை.

இதையடுத்து தேசிய மக்கள் கட்சியின் கான்ராட் சங்மாவை ஆட்சி அமைக்க ஆளுநர் கங்கா பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய மக்கள் கட்சி தலைமையில் புதிய கூட்டணி அரசு வரும் 6-ந் தேதி பதவியேற்க உள்ளது.

English summary
NPP-led alliance is all set to form the next government in Meghalaya. The swearing in ceremony will take place at 10.30 am on March 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X