For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துணி தைக்க வந்து படுகொலை.. நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட டெய்லரை கொன்றது எப்படி? திடுக் தகவல்

Google Oneindia Tamil News

உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட டெய்லர் இன்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் துணி தைக்க வேண்டும் எனக்கூறி கடைக்குள் நுழைந்தவர்கள் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து வீடியோ வெளியிட்ட திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்நவர் நுபுர் சர்மா. இவர் கடந்த மே 27ல் தொலைக்காட்சி விவாதத்தின்போது இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருப்பினும் இந்தியாவின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. நுபுர் சர்மா மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

நுபுர்சர்மாவுக்கு ஆதரவு! தையல்காரரை படுகொலை செய்து வீடியோ வெளியிட்ட இருவர்! பதற்றத்தில் ராஜஸ்தான் நுபுர்சர்மாவுக்கு ஆதரவு! தையல்காரரை படுகொலை செய்து வீடியோ வெளியிட்ட இருவர்! பதற்றத்தில் ராஜஸ்தான்

துணி தைக்க சென்ற 2 பேர்

துணி தைக்க சென்ற 2 பேர்

இந்நிலையில் தான் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட டெய்லர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை நடந்ததன் பின்னணி விபரங்கள் வெளியாகி உள்ளன அதன் விபரம் வருமாறு: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மால்டாஸ் சாலையில் கண்ணையா லால் (வயது 40) என்பவர் தையல் கடை வைத்துள்ளார். டெய்லரான கண்ணையா லாலின் கடைக்கு 2 பேர் சென்றனர். துணி தைக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

அளவு எடுத்தபோது கழுத்து அறுத்தனர்

அளவு எடுத்தபோது கழுத்து அறுத்தனர்

இதையடுத்து கண்ணையா லால் அவர்களுக்கு அளவு எடுத்தார். இந்த வேளையில் ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து கண்ணையா லாலிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கொடூரமாக தாக்க இன்னொருவர் அதனை வீடியோ பதிவு செய்கிறார். இதையடுத்து அந்த நபர் கண்ணையா லாலின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்தனர். இதில் கண்ணையா லால் துடிதுடித்து இறந்தார்.

வீடியோ வெளியீடு

இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய இரண்டு நபர்களும் கொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவவே உதய்பூரின் பல பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. தற்போது கொலையாளிகள் முகமது ரியாஸ், முகமது கோஷ் என இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணையை துவங்கி உள்ளனர்.

போலீஸ் வாபஸ் பெறப்பட்டதா? இதற்கிடையே கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கண்ணையா லால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிலர் மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி கண்ணையா லால் போலீசில் புகார் செய்த நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு அது திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது இருப்பினும் இதுபற்றி போலீஸ் தரப்பில் தற்போது வரை எதுவும் கூறப்படவில்லை.

போலீஸ் வாபஸ் பெறப்பட்டதா? இதற்கிடையே கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கண்ணையா லால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிலர் மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி கண்ணையா லால் போலீசில் புகார் செய்த நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு அது திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது இருப்பினும் இதுபற்றி போலீஸ் தரப்பில் தற்போது வரை எதுவும் கூறப்படவில்லை.

இதற்கிடையே கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கண்ணையா லால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிலர் மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி கண்ணையா லால் போலீசில் புகார் செய்த நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு அது திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது இருப்பினும் இதுபற்றி போலீஸ் தரப்பில் தற்போது வரை எதுவும் கூறப்படவில்லை.

கண்காணிப்பு தீவிரம்

கண்காணிப்பு தீவிரம்

இந்நிலையில் தான் பதற்றமான சூழல் காரணமாக உதய்ப்பூரில் 7 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
Tailor, who posted on a social media site in support of Nupur Sharma in Udaipur, Rajasthan, was brutally murdered today. In this situation, shocking information has come out that those who entered the shop to sew clothes have slit his throat and killed him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X