For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடையை கழற்றிய கொரோனா நோயாளி.. தரையில் பிடித்து அழுத்தி நர்ஸ் கொலைவெறி தாக்குதல்

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய் (பி.டி.யு) அரசு மருத்துவமனையின் கொரோனா பிரிவில் நர்சிங் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் ஒரு நோயாளியை தரையில் பிடித்து அழுத்தி கொலை வெறியுடன் தாக்கும் வீடியா வைரலாகியது.

இதற்கு விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம் , கட்டுக்கடங்காத நோயாளியைக் கட்டுப்படுத்தவே ஊழியர்கள் அப்படி செய்தனர் என்று தெரிவித்துள்ளது.

55 விநாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு துணை மருத்துவர் நோயாளியை முழங்காலால் தரையில் அழுத்துகிறார். மற்றவர்கள் அவரைப் பிடித்துக் கொள்கிறார்கள்.பாதுகாப்புக் காவலர்கள் சுற்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தடி வைத்திருக்கிறார். "இதைச் செய்ய வேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?" என்று ஆவேசமாக கேட்கிறார்.

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி! நடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

தரையில் அழுத்தி தாக்குதல்

தரையில் அழுத்தி தாக்குதல்

காவல்துறையினர் வருகிறார்களா என துணை மருத்துவர் கேட்கிறார். நோயாளி அவர்களிடம் இருந்து வெளியேற முயற்சிக்கும்போது, ​​தடி வைத்திருக்கும் பாதுகாப்புக் காவலர் நோயாளியை அமுக்குகிறார். துணை மருத்துவர் அவரை முகத்தில் அறைகிறார். "கொரோனா காரணமாக உங்களுக்கு எதுவும் நடக்காது" என்று ஒரு பெண் ஊழியர் அந்த நோயாளியிடம் சொல்கிறார். இந்த வீடியோ இன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது. உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும் அதை ஒளிபரப்பின.

கொரோனா நோயாளி

கொரோனா நோயாளி

இந்நிலையில் அடிவாங்கியவர் 38 வயதான பிரபாஷங்கர் பாட்டீல் என்பது தெரியவந்தது. அந்த நோயாளியை ஊழியர்கள் ஏன் தடுத்து நிறுத்துகிறார்கள் என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்தியது. "நோயாளி பிரபாஷங்கர் பாட்டீலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் இன்னமும் கொரோனா பாதிப்புடன் தான் உள்ளார்.

கொரோனாவை பரப்ப முயன்றார்

கொரோனாவை பரப்ப முயன்றார்

அவருக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளும் உள்ளன. எங்கள் மனநலத் துறை அளித்த கருத்தின் படி, அந்த வீடியோ படமாக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு வெறி ஏற்பட்டது, எனவே அவர் அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கினார். மேலும் இன்ட்ரா-வீனஸ் குழாய் மற்றும் ரைலின் குழாயை அகற்ற முயற்சித்தார். பணியில் இருந்த நர்சிங் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் முன் தனது ஆடைகளை அகற்றி, தனக்கும் சக நோயாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் விதத்தில் நடந்துகொண்டார். இதைகவனித்த நர்ஸ் மற்றும் உதவி மருத்துவர்கள் அவரை அப்படி செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்காமல் வெறியுடன் நடந்து கொண்டார். இதனால் தான் அவரை அப்படி மடக்கி தடுத்து நிறுத்தினோம் என்று பி.டி.யூ மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பங்கஜ் புச் தெரிவித்தார்.

மருத்துவர் விளக்கம்

மருத்துவர் விளக்கம்

டாக்டர் பங்கஜ் புச் மேலும் கூறுகையில், ஊழியர்கள் இறுதியில் பாட்டீலைக் கட்டுப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனநலத் துறையுடன் கலந்தாலோசித்து அவருக்கு ஊசி போட்ட பிறகு அவரை சரி செய்தனர்.. அவருக்கு மனநலத் துறையுடன் கலந்தாலோசித்து பிற சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அனைத்து கொரோனா நோயாளிகளையும் பி.டி.யு மருத்துவமனை சிறப்பாக கவனிக்கிறது. PDU மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 400 முதல் 500 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர் என்றார்.

English summary
A purported video showing nursing and security staff slapping a patient after pinning him down to the ground in the Covid-19 wing of the state government-run Pandit Deendayal Upadhyay (PDU) Hospital in Rajkot went viral on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X