For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 21% -ல் இருந்து 26% ஆக உயர்த்தியது ராஜஸ்தான் அரசு!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ராஜஸ்தான் அரசு 21% -ல் இருந்து 26% ஆக அதிகரித்தது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர் : இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை 21% -ல் இருந்து 26% ஆக அதிகரிக்கும் மசோதா ராஜஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 21%-ல் இருந்து 26% ஆக அதிகரித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது.

OBC quota increased in Rajasthan new bill passed in Assembly

இன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், சமூக நீதித்துறை அமைச்சர் அருண் சதுர்வேதி இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். தற்போது 21% இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 26% உயர்த்தப்படும் என்றும், அதில் 5% குஜ்ஜார் இனமக்களுக்கு பிரித்தளிப்பதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தற்சமயம் 49% ஆக இருக்கும் ராஜஸ்தானின் இடஒதுக்கீடு 54% மாறும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்டப்படி, ஒரு மாநிலம் 50% வரை இடஒதுக்கீடு வைத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் வைப்பதற்கு தனியே சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, விரைவில் அதற்கும் சட்டதிருத்தம் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகை அதிகரித்து இருப்பதே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajasthan Assembly passes bill which increase OBC quoto from 21% to 26%. This bill was put forth on assembly by social justice Minister Arun Chaturvedi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X