For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 நாள் போதாது, கார் கட்டுப்பாடு நீட்டிக்கக்கூடும்: ஹைகோர்ட்டில் டெல்லி அரசு தகவல்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கார் கட்டுப்பாட்டு விதிமிறையை தேவைப்பட்டால் கூடுதல் நாட்களுக்கு நீட்டிக்கப் போவதாக டெல்லி அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்று அதிக அளவில் மாசு அடைந்துள்ளதையடுத்து மாசை குறைக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கடந்த 1ம் தேதி கார் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. அதாவது ஒற்றைப்படை தேதிகளில் சாலைகளில் ஒற்றைப்படை எண்கள் உள்ள கார்களும், இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்களும் இயக்கப்பட வேண்டும்.

Odd-even trial: 15 days not enough, we may have to extend it, Delhi government tells High Court

மற்றவர்கள் அரசு பேருந்து, மெட்ரோ, கால் டாக்சி ஆகியவற்றில் செல்ல வேண்டும். சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கட்டுப்பாடு வரும் 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 8 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் கார் கட்டுப்பாட்டை ஒரு வாரத்தோடு முடித்துக் கொண்டால் என்ன என்று டெல்லி அரசிடம் கேட்டது.

அதற்கு டெல்லி அரசு அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

15 நாட்கள் போதாது. தேவைப்பட்டால் நாங்கள் இந்த கட்டுப்பாட்டை மேலும் சில நாட்கள் நீட்டிப்போம் என்று தெரிவித்துள்ளது.

English summary
Kejriwal government told Delhi high court that 15 days are not enough for odd-even formula and it may have to extend it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X