For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயல்.. 7 பேர் பலி.. 20 பேர் படுகாயம்.. பல நூறு மரங்கள் விழுந்தது!

ஒடிசாவில் வீசிய ஃபனி புயலால் இதுவரை அங்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயல் -வீடியோ

    புவனேஷ்வர்: ஒடிசாவில் வீசிய ஃபனி புயலால் இதுவரை அங்கு 7 பேர் பலியாகி உள்ளனர். இந்த புயலில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    ஃபனி புயல் தற்போது ஒடிசா அருகே கரையை கடந்துள்ளது. ஒடிசா மாநிலம் கோபால்புர் மற்றும் சந்த்பாலி ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த புயல் கரையைக் கடந்தது.

    காலை 11 மணிக்கு முழுமையாக இந்த புயல் கரையை கடந்தது. கரையை கடந்த போது 245கிமீ வேகத்தில் இந்த புயல் காற்று வீசியது.

    புயல் எப்படி

    புயல் எப்படி

    இந்த புயல் காரணமாக இதுவரை பலநூறு மரங்கள் விழுந்து இருக்கிறது. கஜா புயலின் போது டெல்டா பகுதியில் மரங்கள் விழுந்தது போலவே தற்போது மரங்கள் அதிக அளவில் விழுந்துள்ளது. இதனால் ஒடிசா முழுக்க மின்சாரம் தடைபட்டு உள்ளது.

    ஒடிசாவில் புயல்

    ஒடிசாவில் புயல்

    ஒடிசாவில் இதனால் மீட்பு பணிகள் தற்போது தடைபட்டு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் இருக்கிறார்கள் என்றும் மீட்பு படையினர் தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல் பூரிக்கு அருகே இருக்கும் கடலோர பகுதிகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மீட்பு பணி

    மீட்பு பணி

    தற்போது அங்கு மீட்பு பணிக்காக தேசிய மீட்பு படையினர் களமிறங்கி இருக்கிறார்கள். பல ஹெலிகாப்டர்கள் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். முதற்கட்டமாக பலருக்கு உணவு, மருந்துகள் மற்றும் உடைகள் அனுப்பப்பட்டுள்ளது.

    மரம் எப்படி

    மரம் எப்படி

    இந்த புயலால் மரம் விழுந்தும், நீரில் மூழ்கியும் 7 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் வரை இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த புயலில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Odisha: 7 People died and more than 20 injured in Deadly Fani Cyclone Storm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X