For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டிலேயே முதல் மாநிலம்.. லாக்டவுனை நீட்டித்தது ஒடிசா அரசு.. நவீீன் பட்நாயக் அறிவிப்பு

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு லாக்டவுனை நீட்டித்த நாட்டின் முதல் மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது. மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதிவரை லாக்டவுனை அமல்படுத்தியுள்ள நிலையில், முதல் முறையாக, ஒடிசா மாநிலம் இவ்வாறு ஒரு நீட்டிப்பை அளித்துள்ளது.

Recommended Video

    Odisha Lockdown extension | நாட்டிலேயே முதல் மாநிலம்.. லாக்டவுனை நீட்டித்தது ஒடிசா அரசு

    வியாழக்கிழமையான இன்று, இந்த முடிவை ஒடிசா எடுத்துள்ளது. கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் நடந்துகொண்டிருக்கும் லாக்டவுன் காலத்தில், உங்கள் கட்டுப்பாடும், தியாகமும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான பலத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது, என்று முதல்வர் நவீன் பட்நாயக் ஒடிசா மக்களுக்கு தொலைக்காட்சியிலாற்றிய உரையில் தெரிவித்தார்.

    Odisha becomes the first state in the country to extend locktown till April 30

    மேலும், ஒடிசாவில் ஏப்ரல் 30 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அரசின் முன்னுரிமை என்று முடிவு செய்ததாக பட்நாயக் தெரிவித்தார்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் ஒரிசாவைச் சேர்ந்த மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலமாகவே முயற்சிகள் எடுக்கப்படும். ஒடிசாவில் சிக்கித் தவிக்கும் அனைத்து மக்களையும் ஒடிசா கவனித்துக்கொள்ளும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.

    சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்றி, லாக்டவுன் காலத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற நடவடிக்கைகள் எளிதாக்கப்படும் என்றும், மக்களின் உணவுப் பாதுகாப்பு என்பது மாநிலத்தின் முக்கிய முன்னுரிமையாகும் என்றும் முதல்வர் கூறினார்.

    முன்னர் கூறியது போல, பொருட்களின் போக்குவரத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. COVID சோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை அளவிடுவதில் நாங்கள் எந்தவிதமான பாடத்தையும் விட்டுவிடவில்லை. மாநிலத்தில் ஒரு லட்சம் ரேபிட் சோதனை செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
    டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

    கொரோனா வைரஸ் என்பது ஒரு நூற்றாண்டுக்கு பிறகு மனித இனம் எதிர்கொண்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. இதை நாம் அனைவரும் புரிந்துகொண்டு தைரியமாக ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். நமது தியாகத்துடனும், பூரி ஜெகன்நாதரின் ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கும். இந்த பிரச்சினையும், கடந்து போகும். இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

    English summary
    Odisha has become the first state in the country to extend Lacktown in view of coronavirus infection. For the first time, the state of Orissa has granted an extension, with the central government implementing Lockdown until April 14.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X