For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு பலி கூட இல்லை.. கொரோனாவிற்கு இடையே ஆம்பன் புயலை விரட்டிய ஓடிசா.. நவீன் பட்நாயக் அசத்தல்!

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: கொரோனா பரவலுக்கும் இடையிலும் கூட ஆம்பன் புயலை மிக சிறப்பாக ஒடிசா மாநில அரசு எதிர்கொண்டு இருக்கிறது. அங்கு ஆம்பன் புயல் காரணமாக ஒருவர் கூட பலியாகவில்லையோ.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் தாக்கியது. 165 கிமீ வேகத்தில் தாக்கிய இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இதனால் இரண்டு நாட்களுக்கு விடமால் ஒடிசாவில் மழை பெய்தது.

இதனால் மேற்கு வங்கத்தில் மிக மோசமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒடிசாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆம்பன் புயலுடன் சேர்த்து அங்கு தற்போது கொரோனா பாதிப்பும் உள்ளது.

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. வடகிழக்கு மாநிலங்கள் முதல் சீனா வரை அதிர்வு.. மக்கள் அதிர்ச்சி!மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்.. வடகிழக்கு மாநிலங்கள் முதல் சீனா வரை அதிர்வு.. மக்கள் அதிர்ச்சி!

சிறப்பாக எதிர்கொண்டது

சிறப்பாக எதிர்கொண்டது

கொரோனா பரவலுக்கும் இடையிலும் கூட ஆம்பன் புயலை மிக சிறப்பாக ஒடிசா மாநில அரசு எதிர்கொண்டு இருக்கிறது. அங்கு ஆம்பன் புயல் காரணமாக ஒருவர் கூட பலியாகவில்லை. இதேபோல் 1999ல் சூப்பர் புயல் ஒன்றின் காரணமாக ஒடிசாவில் பலர் பலியானார்கள். அதன்பின் 2000ம் ஆண்டு நவீன் பட்நாயக் ஒடிசாவில் முதல்வர் ஆனார். அவர் முதல்வர் ஆன போதே பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார்.

செம செயல்

செம செயல்

பேரிடர் மேலாண்மை பணிகளை மேம்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாக கொண்டார். அதன்பின் ஒடிஸாவை தாக்கிய பல்வேறு பபுயல்களை நவீன் பட்நாயக் சிறப்பாக எதிர்கொண்டு இருக்கிறார். கடந்த 18 மாதங்களில் அங்கு 5 புயல்கள் ஏற்பட்டது. அங்கு ஃபனி புயல் தொடங்கி அனைத்திலும் பலி எண்ணிக்கை ஒற்றை இலக்கம் மட்டுமே. அந்த அளவிற்கு ஒடிசா இதில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.

சேதம்

சேதம்

அதேபோல் ஒடிசாவை தற்போது ஆம்பன் புயல் தாக்கியுள்ளது. அங்கு அதிக அளவில் மரங்கள் விழுந்துள்ளது. மின் கம்பங்கள் விழுந்துள்ளது. வீடுகள் மொத்தமாக விழுந்து நொறுங்கி இருக்கிறது. 10 மாவட்டங்களில் உள்ள 1500 பஞ்சாயத்துகளில் இருக்கும் 45 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இதனால் அங்கு யாரும் பலியாகவில்லை. ஒடிசாவின் நவீன் பட்நாயக் அரசு மிக சிறப்பாக செயல்பட்டு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ததுதான் இதற்கு காரணம் ஆகும்.

வாயிலை மையம்

வாயிலை மையம்

இந்திய வானிலை மையம் ஆம்பன் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்தும் உடனடியாக செயல்பட்டு ஒடிசா அரசு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றது. ஒடிசாவில் தீயணைப்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை எல்லாம் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டனர். புயல் அங்கு தாக்கும் முன்பே மொத்தம் 1.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதுதான் அங்கு புயலை எளிதாக வெல்ல காரணம் ஆகும்

முகாம் இருந்தது

முகாம் இருந்தது

அங்கு ஏற்கனவே பல்வேறு முகாம்கள் கொரோனா காரணமாக ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் புயல் காரணமாக அங்கு புதிய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது. அரசு இதையும் தீவிரமாக செய்து பல்வேறு மீட்பு முகாம்களை உருவாக்கியது.இதனால் அங்கு மக்கள் எல்லோரும் காக்கப்பட்டனர். புயல் தாக்கி மறுநாளே அங்கு 85% மின்சாரம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

பெரிய பாராட்டு

பெரிய பாராட்டு

ஆம்பன் புயலுக்கு எதிராக ஒடிசாவில் செயலை பிரதமர் மோடியும் பாராட்டி இருக்கிறார். அந்த மாநிலத்திற்கு மத்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. ஒடிசாவில் தற்போது 1438 கொரோனா கேஸ்கள் உள்ளது. அங்கு 649 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.782 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 7 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Odisha CM Naveen smashed Amphan Storm perfectly amid COVID-19 situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X