For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊக்கத் தொகை கொடுத்து, மருத்துவ உபகரணங்களை வாங்கி குவித்த ஒடிசா அரசு.. கொரோனா ஒழிப்பில் தீவிரம்

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த, ​​ஒடிசா அரசு, சோதனை கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற முக்கியமான மருத்துவ உபகரணங்களை இருப்பு வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.

ஒடிசா ஸ்டேட் மெடிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓஎஸ்எம்சிஎல்) ஜனவரி மாத இறுதியில் இதுபோன்ற தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டதாகவும், புனேவிலிருந்து சுமார் 4,000 டெஸ்ட் கிட்களை வாங்கியது என்றும் அதன் நிர்வாக இயக்குனர் யாமினி சாரங்கி தெரிவித்தார்.

Odisha gets Covid-19 ready with aggressive procurement

"பிபிஇக்கள் (இதில் 15.7 லட்சம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன) என்பது ஒரு பிரச்சினை. ஆனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் தொழில்களின் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக கவனத்தில் வைத்துள்ளோம். எந்த வகையிலும் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி பிபிஇ தேவையை பூர்த்தி செய்ய முடிந்தது.

டிரிபிள் லேயர் மற்றும் என் 95 முகக் கவசங்கள், பிபிஇ மற்றும் வென்டிலேட்டர்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு இடையேயான போட்டியை வெல்ல வேண்டும் என்று ஓஎஸ்எம்சிஎல் தீவிர நடவடிக்கை எடுத்தது. ஏழு நாட்களுக்குள் இப்படியான மருத்துவ உபகரணங்களை வழங்கினால், 50 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்தது. தேசிய நாளிதழ்களில் கால் பக்க விளம்பரம் இதற்காக கொடுக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் மட்டும் ஒடிசா ஸ்டேட் மெடிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ .32 கோடி மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்தது.
இந்த அமைப்புக்கு, மாநில அரசு ஏற்கனவே, 630 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நிதி பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொண்டது.
கடந்த வாரம் புவனேஸ்வரில் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு 4000 சோதனை கருவிகளை கொண்டு வர ஒரு சார்ட்டர் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதேபோன்ற ஏழு சிறப்பு விமானங்கள் மூலம் பொருட்கள் டெலிவரியாகியுள்ளன.

ஒடிசாவில் தற்போது 299 ஐ.சி.யூ வென்டிலேட்டர்கள் உள்ளன, புதிதாக 424 கருவிகளுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 57 சப்ளையாகியுள்ளன. 1000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும், 7700 நெபுலைசர்களும் ஒடிசா வந்து கொண்டிருக்கின்றன.

அதேநேரம் தரத்தில் எந்த சமரசமும் இருக்காது என்கிறார் சாரங்கி. இது விற்பனையாளர்களின் சந்தை. ஜனவரி மாதத்தில் ஒரு N95 முகக் கவசம் ரூ .18 முதல் ரூ .20 வசூலித்த இந்திய அரசு நிறுவனமான எச்.ஏல்.எல் லைஃப்கேர் இப்போது அதிக உள்ளீட்டு செலவுகள் காரணமாக, ஒரு முகக் கவசத்திற்கு ரூ .49.65 வசூலிக்கிறது. இருப்பினும், சுகாதாரத் துறை அதிகாரிகள், செலவுகள் குறித்து கவலைப்படுவதில்லை.

English summary
Getting off the blocks fastest can make all the difference even to the best of sprinters. It is no different for states competing for drugs, masks, and Personal Protective Equipment (PPE) for their fight against the Covid-19 pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X