For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக்டவுன்.. குழந்தைகள் அர்த்தமுள்ள வகையில் பொழுது போக்க வேண்டும்.. ஓடிசா அரசு அசத்தல் ஏற்பாடு

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிசா அரசும், யுனிசெஃப்பும் இணைந்து, லாக்டவுன் காலகட்டத்தில், 16 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை அர்த்தமுள்ள வழியில் பயணிக்கச் செய்ய செயல்பாடுகளின் பட்டியலை உருவாக்கியுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து 3 முதல் 6 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 72,587 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Odisha govt, UNICEF join hands to keep children busy during lockdown

இந்த குழந்தைகளை நல்ல பணிகளில் ஈடுபடுத்தி ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது, யுனிசெஃப் உடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு (WCD) மற்றும் மிஷன் சக்தி (எம்.எஸ்) துறை, எனவே, காலண்டர் அடிப்படையிலான 'கரே கரே அருனிமா' ('Ghare Ghare Arunima') என்ற செயல் திட்டம் வெளியிட்டுள்ளது. இதில், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளின் உதவியோடு, குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க தேவையான செயல்பாடுகள் உள்ளன.

இது ஆரம்பகால கற்றலை கற்பிக்கவும், வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் நிலையை மனதளவில் தயார்படுத்தவும் உதவும் என்று அந்த அதிகாரி கூறினார். WCD & MS செயலாளர் அன்பு கார்க் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ​​குடும்பங்கள் இளம் குழந்தைகளை வீட்டில் அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுத்துவது முக்கியம் என்று கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களைத் தூண்டுவதோடு அவர்களின் உளவியல் சமூக நலனை மேம்படுத்தும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

பாடல்கள், நடனம், ஓவியம் மற்றும் கதை சொல்லல் போன்ற செயல்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்காக பெற்றோரையும் இணைத்துக் கொள்ள இந்த திட்டம் வலியுறுத்துகிறது.

கைகளை கழுவுதல், சுகாதாரம், மற்றும் தொற்றுநோயைத் தடுக்க சமூக விலகல் போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் குறித்தும் இது கவனம் செலுத்துகிறது. மேலும், குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளான ஆடைகளை மடிப்பது, தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வது போன்றவையும் கற்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

English summary
The Odisha government along with UNICEF on Tuesday released a calendar-based fun-filled list of activities for children to keep over 16 lakh children engaged in a meaningful way during the lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X