For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டி.. காங். எம்.எல்.ஏ. பதவி அதிரடி ரத்து

போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

By Mathi
Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: சட்டசபை தேர்தலில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோகேஷ் குமார் சிங்கின் பதவியை அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

ஒடிஷாவில் 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது சுந்தர்கார் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸின் ஜோகேஷ் சிங் வெற்றி பெற்றார்.

Odisha HC disqualifies Cong MLA

ஆனால் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றார் ஜோகேஷ் சிங் என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று ஜோகேஷ் சிங்கின் எம்.எல்.ஏ. பதவியை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜோகேஷ்சிங், தம்மை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என கூறியுள்ளார்.

English summary
Odisha High Court today disqualified Sundergarh Congress MLA Jogesh Singh over submission of fake caste certificate during 2014 elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X