For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக்டவுன் காலத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குடும்ப வன்முறை.. ஒடிசா அரசு செம வியூகம்

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: லாக்டவுன் காலத்தில், நாடு முழுக்கவே, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்த பிரச்சினையை சமாளிக்க ஒடிசா மாநில காவல்துறை வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே குடும்ப வன்முறைகள் பற்றி, காவல் நிலையத்தில், புகாரளித்த பெண்களை காவல்துறையினர் தொடர்புகொண்டு, தற்போது அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தொலைபேசியில் கேட்டறிகிறார்கள்.

 Odisha police takes initiative to address domestic violence during lockdown

நெருக்கடி காலத்தில் குடும்ப வன்முறைகள் பிரச்சினைகளை சமாளிக்க சிறப்பு டிரைவ்-போன்-அப் திட்டம் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது, என்றார் ஒரு போலீஸ் அதிகாரி. இந்த முயற்சி மாநில குற்ற பதிவு பிரிவு உதவியுடன் செயல்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த காலங்களில் குடும்ப வன்முறையை அனுபவித்த பெண்களின் தொடர்புகள் எஸ்.சி.ஆர்.பி.யிடம் உள்ளது, மேலும் அவர்களின் தற்போதைய நிலையை அறிய அவர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்று மாநில காவல்துறை தலைமையக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடும்ப வன்முறைகள் தெரிந்தால், பாதிக்கப்பட்டவரின் நிலையை அறிய உடல் சரிபார்ப்பு நடத்தப்படும், மேலதிக நடவடிக்கைகளுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான புலனாய்வு பிரிவுக்கு (IUCAW) தெரிவிக்கப்படும், என்றார்.

இது பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்று அந்த அதிகாரி கூறினார். குடும்ப வன்முறைகள் வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் நவீன் பட்நாயக் முன்னதாக டிஜிபியிடம் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Odisha police has come out with an initiative through which policemen will contact women who had earlier reported domestic violence to enquire about their condition over phone during the ongoing lockdown, an official said on Saturday. The special drive -Phone-Up Programme- has been launched across the state to deal with the problems of domestic violence in the crisis period, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X