For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிஷாவின் ஏழை பங்காளன்.. சைக்கிள் ஓட்டும் அமைச்சர்.. சாரங்கியின் கடந்த காலம்... பகீர் தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒடிஷா மோடியின் நிஜ முகம் இதுதானா.. பகீர் தகவல்கள்- வீடியோ

    புவனேஸ்வர்: மத்திய அமைச்சரும் ஒடிஷாவின் மோடி என்று புகழப்படுபவருமான பிரதாப் சாரங்கியின் நிஜமுகம் குறித்த பகீர் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    ஒடிஷாவின் பாலசோர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பிரதாப் சாரங்கி. தெருவோர குழாயில் குளித்துவிட்டு சைக்கிளில் ஒற்றை பையுடன் தேர்தல் பிரசாரம் செய்த எளிய மனிதர். அமைச்சரவை பதவியேற்றத்தின் போது பிரதாப் சாரங்கியின் பெயர் உச்சரிக்கப்படபோது எழுந்த கரவொலி அடங்க வெகுநேரமானது.

    தற்போது இந்த பிரதாப் சாரங்கியின் பூர்வோத்திரம் குறித்த அதிர்ச்சியான தகவல்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 1999-ம் ஆண்டு உலகை உலுக்கும் வகையில் ஒடிஷாவில் கிரஹாம் ஸ்டெயின்ஸும் அவரது பிஞ்சு குழந்தைகளும் பஜ்ரங் தள் எனும் இந்துத்துவா அமைப்பினரால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டனர்.

    அதிமுகவால்தான் தமிழகத்தில் பாஜக அணி தோற்றது.. புயலை கிளப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி டுவீட் அதிமுகவால்தான் தமிழகத்தில் பாஜக அணி தோற்றது.. புயலை கிளப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி டுவீட்

    துடிக்க துடிக்க எரிப்பு

    துடிக்க துடிக்க எரிப்பு

    ஒடிஷாவில் இந்துக்களை கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் மதமாற்றம் செய்கிறார் எனக் கூறி திட்டமிட்டு அவரை உயிரோடு ஜீப்பில் வைத்து எரித்துக் கொன்றது அந்த கும்பல். அதுவும் பாதிரியாரும் அவரது பிஞ்சு குழந்தைகளும் உயிர் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த குடும்பமும் கருகி சாம்பலாகும் வரை காத்திருந்து காரியத்தை முடித்துவிட்டு தப்பியது பஜ்ரங் தள் கும்பல்.

    பஜ்ரங் தள் தாராசிங்

    பஜ்ரங் தள் தாராசிங்

    இது தொடர்பான வழக்கில் தாராசிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய 11 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தாராசிங்கின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த படுபயங்கரமான வழக்கில்தான் ஒடிஷாவின் மோடி என புகழப்படும் பிரதாப் சாரங்கியின் தொடர்பும் இருக்கிறது.

    பிரதாப் சாரங்கி

    பிரதாப் சாரங்கி

    தாராசிங்கும் அவனது கூட்டாளிகளும் பஜ்ரங்க் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஆனால் பஜ்ரங் தள் அமைப்பின் மாநில தலைவராஜ இருந்த இதே பிரதாப் சாரங்கியிடம் ஒருமுறை கூட போலீசார் விசாரணை நடத்தவே இல்லை. இது தொடர்பாக பல முறை ஊடகங்கள் கேள்வி எழுப்பியும் அதற்கான விடை எதுவும் கிடைக்கவில்லை. அதுவும் பாதிரியார் படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட கமிஷன், பஜ்ரங்தள் அமைப்பு சட்டப்பூர்வமானது. அந்த அமைப்பு இது போன்ற படுகொலைகளை திட்டமிட்டு செய்திருக்காது என முடிவுக்கு வந்தததுதான் ஆச்சரியமான ஒன்று.

    அன்று வி.ஹெச்.பி

    அன்று வி.ஹெச்.பி

    பாதிரியார் படுகொலை வழக்கு மட்டுமல்ல.. 2002-ம் ஆண்டு ஒடிஷா சட்டசபையை தாக்கிய சம்பவத்திலும் 'ஏழை பங்காளன்' பிரதாப் சாரங்கி மீது வழக்கு பதிவாகி இருக்கிறது. அப்போது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தீவிர உறுப்பினராக இருந்தவர் பிரதாப் சாரங்கி. இவர் தாக்கல் செய்த வேட்புமனுவிலேயே மொத்தம் 10 கிரிமினல் வழக்குகள் தம் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார். பாலசோர் மாவட்டத்தின் நிலகிரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக 2004, 2009-ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் பாலசோர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியும் கண்டிருக்கிறார் இந்த ஏழை பங்காளன். இத்தேர்தலில் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Odisha's Modi and Union Minister Pratap Sarangi was past president when the Graham Staines and his two young sons were burnt alive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X