For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிஷாவில் 300 படுக்கைகளுடன் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது 2 கொரோனா மருத்துவமனைகள்

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: ஒடிஷாவில் 300 படுக்கைகளுடன் விரைவில் கொரோனா நோயாளிகளுக்கான 2 மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

Recommended Video

    லாக்டவுன் இல்லாவிட்டால், 8.2 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர்

    சீனாவில் கொரோனா தாக்கம் தொடங்கிய நிலையில் உடனடியாக கொரோனா நோயாளிகளுக்கு தனி மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இதே பாணியில் இந்தியாவில் ரயில் பெட்டிகளையே தனிமைப்படுத்தப்படுவோருக்கான வார்டுகளுக்காக மாற்றப்பட்டுள்ளன.

    Odisha to have 2 new Covid-19 hospitals with total capacity of 300 beds

    மேலும் ஒடிஷாவில் கொரோனா நோயாளிகளுக்கு தனியே 2 பிரமாண்ட மருத்துவமனைகளை கட்டும் முயற்சியை அம்மாநில அரசு மேற்கொண்டது. நேஷனல் அலுமினியம் கம்பெனி (நால்கோ) மற்றும் பாரதீப் துறைமுகம் ஆகியவற்றுடன் இணைந்து ஒடிஷா அரசு இம்மருத்துவமனையை கட்டி வருகிறது.

    மொத்தம் 300 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகளாக இது உருவெடுத்து வருகிறது. ஏற்கனவே நப்ரங்பூரில் 200 படுக்கைகளுடன் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையை நால்கோ அமைத்துள்ளது. அதேபோல் ஜகத்ஷிங்பூரில் பாரதீப் துறைமுக நிர்வாகமும் 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையை அமைத்திருக்கிறது.

    ஒடிஷா அரசும் ஏற்கனவே 1950 படுக்கைகளுடன் கூடிய 10 மருத்துவமனைகளை 2,250 படுக்கைகளுடன் கூடியதாக மாற்றி உள்ளது. மேலும் 6,000 படுக்கைகளுடன் கூடிய 34 கொரோனா மருத்துவமனைகளையும் ஒடிஷா அரசு உருவாக்கி வருகிறது. இது தொடர்பாக நால்கோ பொதுமேலாளர் ஶ்ரீதர் பத்ரா, கடந்த காலங்களில் இயற்கை பேரழிவுகளின் போது மக்களுடன் நால்கோ இணைந்து நின்று மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. தற்போது அதைவிட மிகவும் கடினமான சூழல். இதனையும் எதிர்கொள்ள மக்களுடன் ஒருங்கிணைந்து நிற்போம் என்றார்.

    கொரோனா: தனிநபர் இடைவெளியை அக்கறையுடன் பின்பற்றும் ஒடிஷா திராவிடர் பழங்குடிகள் கொரோனா: தனிநபர் இடைவெளியை அக்கறையுடன் பின்பற்றும் ஒடிஷா திராவிடர் பழங்குடிகள்

    இதனிடையே கிழக்கு ரயில்வே நிர்வாகம், சரக்கு ரயில்கள் மூலமாக பல்வேறு ரயில் நிலையங்களுக்கு மருந்து பொருட்களை கொண்டு சென்றுள்ளது. அத்துடன் அத்தியாவசியப் பொருட்களையும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நகரங்களுக்கு சென்று சேர்த்திருக்கிறது.

    English summary
    Odisha's Hospitals For treatment of Coronavirus patients only, will come up in association with National Aluminium Company and Paradip Port Trust.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X