For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளம் மனைவியை ரயிலில் தனியாக அனுப்பிய கணவன்.. வாழைப்பழம் தந்த தாத்தா.. அடுத்து நடந்த செம ட்விஸ்ட்!

ரயிலில் காணாமல் போன மனைவியை 3 நாட்களுக்கு பிறகு கணவன் தேடி கண்டுபிடித்தார்

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: 27 வயசு இளம் மனைவியை, ரயிலில் ஊருக்கு தனியாக அனுப்பி வைத்தார் கணவர்.. கடைசியில் அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது!!

ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர ஜனா.. இவருக்கு 28 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கபீர் ஜனா.. அவருக்கு 27 வயதாகிறது.

இவர்கள் 2 பேருமே புதுச்சேரியில் வேலை பார்த்து வருகிறார்கள்.. அங்கேயே தங்கி, மேட்டுப்பாளையம் எனும் பகுதியில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் ஆகாஷ், ஒடிசாவிலேயே பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறான்.

"தற்கொலைக்கு முன்பு சித்ரா பேசினாரா.. என்ன சொன்னார்".. அம்மாவிடம் ஆர்டிஓ கிடுக்கிப்பிடி விசாரணை

ஒடிசா

ஒடிசா

தம்பதி இருவரும் வருஷத்துக்கு ஒருமுறை தங்கள் பிள்ளையை ஒடிசா சென்று பார்த்து விட்டு வருவார்கள்.. ஆனால், இந்த முறை ரவீந்திரால் ஒடிசா செல்லமுடியவில்லை.. அதனால் மனைவி கபீரை மட்டும் கடந்த 9ம் தேதி புதுச்சேரியில் இருந்து புவனேஸ்வர் செல்லும் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

 கபீரை காணோம்

கபீரை காணோம்

அன்று சாயங்காலம் 6.45 மணிக்கு கிளம்பிய அந்த ரயில், மறுநாள் சாயங்காலம் ஒடிசாவுக்கு சென்றுவிட்டது.. மனைவியை ரயில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டதாக, ரவீந்தர் வீட்டுக்கு ஏற்கனவே தகவல் கொடுத்திருந்ததால், கபீரை அழைத்து செல்ல, அவர்களும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர்.. ஆனால்,அந்த ரயிலில் கபீரை காணோம். இந்த தகவலை, ரவீந்தருக்கு சொல்லவும், அவரும் அதிர்ச்சியடைந்து, புதுச்சேரி ஒதியன்சாலை ஸ்டேஷனில் புகார் தந்தார்.

தேடினர்

தேடினர்

அப்போதும் அவருக்கு மனசே ஆறவில்லை.. அதனால் கபீரை தேடி அவரும் ஒரு கார் பிடித்து ஒடிசாவுக்கு சென்றார். ரயிலில் சென்றால், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் மனைவியை தேட முடியாது என்பதால் காரை பிடித்து கொண்டு போனார்... அதன்படியே 3 நாட்களாய் ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனாக கபீரை தேடினார். கடைசியாக ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட பாலேஸ்வர் என்ற பகுதியில் தேடும்போதுதான், கபீரின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.

ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

அதனால், பாலேஸ்வர் ரயில்வே ஸ்டேஷனில் கபீர் எங்காவது இருக்கிறாரா என்று தேடினார்.. அப்போதுதான் ஒரு பெண் அங்கு மயங்கி விழுந்து கிடந்ததாகவும், அவரை அங்கிருந்தோர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் சொன்னார்கரள்.. இதை கேட்டு மேலும் அதிர்ந்துபோன ரவீந்தர், அந்த ஆஸ்பத்திரிக்கு பதறி அடித்து கொண்டு ஓடினார்.. அங்கு கபீர் இருந்தார். அப்போதுதான் நடந்த விவரம் என்னவென்று கேட்டார்.

 வாழைப்பழம்

வாழைப்பழம்

ரயிலில் ஒரு பெரியவர் வந்து, கபீருக்கு சாப்பிட வாழைப்பழம் தந்தாராம்.. ஆனால், கபீர் அதை வாங்கவில்லையாம்.. நான் உன் அப்பா மாதிரி என்று சொல்லி மறுபடியும் வாழைப்பழத்தை தந்து சாப்பிட சொன்னாராம். அதை வாங்கி சாப்பிட்டதும் கபீருக்கு மயக்கம் வந்துள்ளது.. பிறகு, கண் விழித்து பார்த்தால் கழுத்தில் கிடந்த செயினை காணோம்.. அதன் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாயாம்.. அப்பா மாதிரி என்று சொன்ன அந்த தாத்தாவையும் காணோமாம்.

 பரபரப்பு

பரபரப்பு

இதற்கு பிறகு பாலேஸ்வர் பகுதி ஸ்டேஷனில் நகை கொள்ளை போனது தொடர்பாக புகார் அளித்துவிட்டு, தம்பதி ஊருக்கு திரும்பினார்கள்.. ஆனால், மனைவியை கணவன் தனியாக ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு, அவரை காணாமல், தானே 3 நாட்களாக தவியாய் தவித்து தேடி கண்டுபிடித்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Odisha woman Missing while traveling by train from Pondicherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X