For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரிலிருந்து வடகொரியாவுக்கு புக் ஆன ஓலா டாக்சி.. சிஸ்டமே சரியில்லை பாஸ்!

பெங்களூரில் ஓலா பயன்படுத்தும் நபர்கள் வெளிநாடு செல்ல டாக்சி முன்பதிவு செய்வதாக புகார் எழுத்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூரு டூ வடகொரியாவுக்கு புக் ஆன ஓலா டாக்சி- வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் ஓலா பயன்படுத்தும் நபர்கள் வெளிநாடு செல்ல டாக்சி முன்பதிவு செய்வதாக புகார் எழுத்து இருக்கிறது. அதிகமாக ஓலா பயன்படுத்தும் நபர்களுக்கு, ''நீங்கள் இந்த நாட்டிற்கு செல்ல ஓலா புக் செய்து இருக்கிறீர்கள்'' என்று மெயில் வந்துள்ளது.

    பெரும்பாலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு இவர்கள் முன்பதிவு செய்ததாக புகார் வந்துள்ளது. ஆனால் எந்த நபரும் உண்மையாக இப்படி வெளிநாடு செல்ல டாக்சி புக் செய்யவில்லை.

    இதுகுறித்து ஓலா வாடிக்கையாளர்கள் எல்லோரும் புகார் அளித்துள்ளார்கள். இதற்கு ஓலா சுவாரசியமாக பதில் அளித்துள்ளது.

    புகார் அளித்தார்

    இதுகுறித்து முதல்முதலாக ரோஹித் மெண்டா என்ற பெங்களூர்வாசி இரண்டு நாள் முன்பு புகார் அளித்தார். அதில் ''இது எப்படி சத்தியம் ஆகும். வடகொரியாவுக்கு பயணமா. ஓலா உங்களுடைய சிஸ்டமே சரி செய்யுங்கள்'' என்று புகார் அளித்துள்ளார். அதில் வடகொரியா செல்ல 1 லட்சத்து 49 ஆயிரம் பில் போடப்பட்டு இருக்கிறது.

    பலருக்கு இதே பிரச்சனை

    பலருக்கு இதே பிரச்சனை

    ஆனால் அவருக்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை. அடுத்தடுத்த நாட்களில் பலருக்கும் இந்த பிரச்சனை வந்துள்ளது. 60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பில் கொடுத்து கனடா செல்ல, அமெரிக்கா செல்ல, நியூசிலாந்து செல்ல என பலருக்கு இப்படி மெசேஜ் சென்று இருக்கிறது. சிலர் இந்த ஐடியா கூட நன்றாக இருக்கிறதே என்று சந்தோசப்பட்டு இருக்கிறார்கள்.

    காரணம்

    இதற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் எந்த தவறும் செய்யவில்லை, தானாக சிஸ்டம் பிரச்சனை காரணமாக இப்படி நடந்து இருக்கிறது என்று ஓலா தெரிவித்துள்ளது. விரைவில் சரிசெய்யப்படும் என்று கூறியுள்ளது. போனை சுவிட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யும் படி கூறியுள்ளார்கள்.

    ஓலா பதில்

    இன்னொரு டிவிட்டில் ''நிலவை தொட விருப்பம் என்று நாங்கள் கூறி இருந்தோம். ஆனால் அதை இந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நாங்கள் இந்த பிரச்சனையை சரிசெய்யும் சமயத்தில் நீங்கள் வெளிநாடு செல்லவேண்டும் என்றால், விமானத்தில் செல்லுங்கள்'' என்று ஓலா காமெடியாக போஸ்ட் செய்துள்ளது.

    English summary
    Ola is booking automatically to foreign countries in Bengaluru. Users are struggling with this problem for past 4 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X