For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதாலா ‘திஹார்’ சிறையில் கைதிகள் அரசை அமைக்கலாம்: பூபிந்தர் சிங் ஹூடா கிண்டல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா டெல்லி திஹார் சிறையில் கைதிகள் அரசை உருவாக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளார் ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப் பட்டிருந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா சமீபத்தில் ஜாமீனில் வெளி வந்தார். தேர்தல் விதிமுறைகளை மீறி ஹரியானா சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்றார் சவுதாலா.

Om Prakash Chautala can only form 'cabinet of prisoners', says Bhupinder Singh Hooda

இதனால், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் மீண்டும் திஹார் சிறையில் அடைக் கப்பட்டார். அப்போது, ‘திஹார் சிறையில் இருந்து கொண்டே ஹரியாணா முதல்வராக பொறுப்பேற்பேன்' என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா இது குறித்துக் கூறுகையில், ‘ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சவுதாலா சட்டசபை தேர்தலில்கூட போட்டியிட முடியாது. ஆனால் அவர் முதல் வராவேன் என்று கனவு காண்கிறார்.

அவரது முதல்வர் ஆசை நிறைவேற என்னிடம் சிறந்த யோசனை உள்ளது. திஹார் சிறையில் உள்ள கைதிகளிடம் பொதுத்தேர்தல் நடத்தி அங்கு அவர் புதிய அரசை அமைக்கலாம். கைதிகளைக் கொண்டே அமைச்சரவையை உருவாக்கி சிறையில் அரசு நடத்தலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
With former Haryana chief minister Om Prakash Chautala back in Delhi's Tihar prison following his surrender on court's order Saturday evening, a no-holds-barred verbal fight has broken out between the ruling Congress and his Indian National Lok Dal (INLD). Chief Minister Bhupinder Singh Hooda Sunday unleashed verbal barbs at the jailed INLD chief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X