For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாட்ஸ் ஆப்பில் வீடியோ அனுப்பலாம், போட்டோ அனுப்பலாம்.. இதையுமா அனுப்புவீங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    மனைவிக்கு வாட்சப்பில் தலாக் கூறிய கணவன்

    ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, ஓமன் நாட்டைச் சேர்ந்த அவரது கணவர் வாட்ஸ் ஆப் மூலம் தலாக் கொடுத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Oman husband gives Talaq on Whatsapp

    ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஹூமா சாய்ரா. 29 வயதான இவர் ஓமன் நாட்டைச் சேர்ந்த 62 வயதாகும் நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் ஓமன் சென்ற அவர் அங்கு ஒரு வருடம் கணவர் வீட்டில் தங்கியிருந்தார். கர்ப்பமும் தரித்தார். ஆனால் 8வது மாதத்திலேயே குறைப்பிரசவம் ஆகி குழந்தையும் இறந்து போனது.

    இதையடுத்து உடலை சரிப்படுத்திக் கொண்டு வருமாறு கூறி ஓமன் கணவர், சாய்ராவை ஹைதராபாத்து்க்கு கடந்த ஜூலை 30ம் தேதி அனுப்பி வைத்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 12ம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் சாய்ராவுக்கு அவரது கணவர் தலாக் அனுப்பினார். தொடர்ந்து 18ம் தேதி இன்னொரு தலாக்கையும் அனுப்பினார். இதனால் சாய்ரா அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் வைத்துத் திருமணம் நடந்தது. ஒரு வருடம் ஓமனில் வாழ்ந்தேன். தாய் வீட்டுக்கு வந்த இடத்தில் எனது கணவர் எனக்கு தலாக் கொடுத்து விட்டார். நான் இதுகுறித்துக் கேட்டு தொடர்பு கொண்டால் பதிலே வரவில்லை. எனக்கு உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கேட்டுக் கொள்கிறேன் என்றார் சாய்ரா.

    English summary
    29-year-old Huma Saira was allegedly given talaq on WhatsApp by her 62-year-old husband. She says,"I was married to an Oman national in May'17 in Hyderabad. I lived in Oman for 1 year. I gave birth to a baby in 8 months who died in 3 months because of bad health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X