For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

Omar Abdullah , Mehbooba Mufti booked under PSA

பின்னர் பரூக் அப்துல்லா மீது தேசத்துக்கு எதிராக பேசியதாலும் பிரிவினையை தூண்டியதாலும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் சிறையில் முன்னாள் முதல்வர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

6 மாதங்களுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரில் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

தமிழகத்தில் மதுபானங்கள் விலை நாளை முதல் கிடுகிடு உயர்வுதமிழகத்தில் மதுபானங்கள் விலை நாளை முதல் கிடுகிடு உயர்வு

இந்நிலையில் காஷ்மீர் சிறையில் இருக்கும் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பொதுபாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவரை எந்த வித விசாரணையுமே இல்லாமல் 3 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
National Conference leader Omar Abdullah and Peoples Democratic Party leader Mehbooba Mufti have been booked under Public Safety Act (PSA).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X