For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி!

Google Oneindia Tamil News

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தல் முடிவு ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது என அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

இந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு மத்திய அரசு நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Omar Abdullah says J&K poll results show people not happy with abrogation of Article 370

ஜம்மு-காஷ்மீரில் 280 மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட சிறப்பு அந்தஸ்து 370-ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது மத்திய அரசு.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா இந்த தேர்தல் முடிவு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் முடிவு எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. ஏனெனில் நாங்கள் பல காலம் சிறையில் இருந்தோம். எங்களுக்கு எதிராக அரசு எந்திரங்கள், அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியபோதும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

நாட்டில் எவரும்... மதம் காரணமாக... பின்னுக்கு தள்ளப்பட மாட்டார்கள்... பிரதமர் மோடி பளிச் பேச்சு!நாட்டில் எவரும்... மதம் காரணமாக... பின்னுக்கு தள்ளப்பட மாட்டார்கள்... பிரதமர் மோடி பளிச் பேச்சு!

ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து நீக்கியதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பது இந்த தேர்தல் முடிவு மூலம் தெளிவாகிறது. பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றதை சாதனை என நினைத்து கொள்கிறார்கள். அது ஒரு சாதனை என்றால், நாங்கள் பெற்ற வெற்றி என்பது ஒரு நிலச்சரிவு போன்றதாகும்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற வேண்டும் என்பதில் குப்கர் கூட்டணி உறுதியாக உள்ளது. இதற்காக தொடர்ந்து போராடுவோம் என்று உமர் அப்துல்லா கூறினார்.

English summary
Omar Abdullah has said that Kashmir District Development Council election results show that the people do not accept the removal of Jammu and Kashmir's special status
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X