For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் பொண்டாட்டி எனக்கு வேணாம்... ரிவர்ஸில் மரத்தை சுற்றி வேண்டும் வடமாநில ஆண்கள்!!

என் பொண்டாட்டி எனக்கு வேணாம் என்று கூறி ஆலமரத்தை வட மாநில ஆண்கள் சுற்றிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    வடமாநிலத்தில் பிரபலமான வத் பூர்ணிமா சடங்கு -வீடியோ

    மும்பை : என் பொண்டாட்டி இந்த ஜென்மத்துடன் போதும் ஏழேழு ஜென்மத்துக்கு வேண்டாம் என்று பிரார்த்தனை செய்து கொண்டு ஆலமரத்தை வடமாநில ஆண்கள் ரிவர்ஸில் சுற்றிய சம்பவம் வினோதமாக உள்ளது.

    பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் அந்த பெண்ணே பேயானால்... இது ஆண்கள் அடிக்கடி கூறும் கமென்ட் ஆகும். பொதுவாக பெண்கள் திருமணத்துக்கு முன்பு நினைப்பது கண்ணுக்கு லட்சணமான புருஷன், நல்ல உத்யோகம், அன்பு, பாசம் ,சந்தோஷமான வாழ்வு உள்ளிட்டவைதான்.

    திருமணத்துக்கு பிறகு இவை அனைத்தும் கிடைத்துவிட்டால் இந்த கணவரே தனக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் வர வேண்டும் என்று வேண்டி கொள்வர். ஆனால் பெரும்பாலான ஆண்கள் மட்டும் எப்போதும் இதுபோல் நினைக்க மாட்டார்கள்.

    நோன்பு

    நோன்பு

    நாங்கள் அப்படி இல்லை என்று போர்க் கொடி உயர்த்தாதீர் ஆண்களே. இது எந்த அளவுக்கு நிதர்சனம் என்பதை மேற்கொண்டு படியுங்கள். மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெண்கள் வத் பூர்ணிமா என்ற சடங்கை மேற்கொள்வர். அதை நோன்பு என்றும் கூறலாம்.

    புனித நூல்

    புனித நூல்

    அந்த பண்டிகையானது வத் சாவித்திரி என்றும் கூறுவதுண்டு. திருமணமான பெண்கள் தங்களுக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் தற்போதுள்ள கணவரே கணவராக வரவேண்டும் என்று வேண்டி கொள்வர். இதற்காக அவர்கள் விரதம் மேற்கொள்வர். நீர் நிலைகளில் பழம், பூஜை பொருட்கள், புனித நூல் ஆகியவற்றை படைப்பர்.

    ஆண்கள்

    ஆண்கள்

    சாவித்திரி, சத்யவானை எமனிடம் இருந்து மீட்டதன் அடிப்படையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இவ்வாறு வேண்டி கொண்டு ஆலமரத்தில் நூலில் மஞ்சள் தடவி அது அறுந்துவிடாமல் கட்டுவர். பெண்கள் இப்படி இருக்கையில் ஆண்களோ இவர்களுக்கு எதிர்மாறாக உள்ளனர்.

    கோஷம்

    கோஷம்

    ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட ஆண்கள் அரசமரத்தை இடமிருந்து வலமாக சுற்றி வந்தனர். அப்போது அவர்கள் கடவுளே அடுத்த 7 ஜென்மத்துக்கும் இதே பொண்டாட்டி வேண்டாம். எங்கள் மனைவிகள் எங்களை துன்புறுத்துகின்றனர். எனவே அவர்களுடன் 7 வினாடிகள் கூட வாழ முடியாது, இதில் எங்கிருந்து 7 ஜென்மத்துக்கு வாழ்வது என்று கோஷமிட்டு கொண்டே சுற்றினர்.

    பிரச்சினை

    பிரச்சினை

    இவர்களை பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், "நல்ல" பொண்டாட்டிகளை கொண்ட ஆண்களோ அய்யோ பாவம் இவர்களுக்கு என்ன பிரச்சினையோ என பரிதாபப்பட்டு சென்றனர்.

    உணவையும் எனது வேலைகளையும் நானே செய்து கொள்வதால் எனக்கு மனைவி வேண்டாம். அவரால் எனது வேலை போய்விட்டது. அவரது முகத்தை பார்ப்பதை விட இறப்பதே மேல் என்று ஒரு கணவர் குமுறுகிறார் மக்களே!

    English summary
    While women in Maharashtra prayed for the well-being and long life of their husbands on Vat Purnima today, a group of men here, claiming to be victims of harassment by their wives, sought “freedom” from them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X