For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்ட விசிட்டிங் கார்டு.. புனேவில் நிகழ்ந்த ருசிகர சம்பவம்!

Google Oneindia Tamil News

புனே : மகாராஷ்டிர மாநிலம் புனாவில் ஒரே ஒரு விசிட்டிங் கார்ட்டால், வீட்டு வேலை செய்துவரும் கீதா கேல் என்பவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

அந்த விசிட்டிங் கார்ட்டில் கீதா செய்யக்கூடிய வேலைகள் மற்றும் அதற்கான கட்டணங்கள் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளதே கீதாவிற்கு தற்போது வேலை வாய்ப்புகளை குவித்து வருகிறது.

கீதா வேலை செய்யும் வீட்டின் உரிமையாளரும் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வருபவருமான தனாஸ்ரீ ஷிண்டேவின் கைங்கர்யத்தில் தற்போது கீதா பிசியாக உள்ளார். அவருக்கு அவரது போனை எடுத்து வேலை குறித்து கேட்பவர்களுக்கு பதிலளிக்கவே நேரம் சரியாக இருக்கிறதாம்.

ரிசார்ட் ஓனருடன் நெருக்கம்.. கணவர் படுகொலை.. சாக்கு மூட்டையில் கட்டி.. குழி தோண்டி புதைத்த மனைவி!ரிசார்ட் ஓனருடன் நெருக்கம்.. கணவர் படுகொலை.. சாக்கு மூட்டையில் கட்டி.. குழி தோண்டி புதைத்த மனைவி!

கைகொடுத்த எஜமானி

கைகொடுத்த எஜமானி

புனேவை சேர்ந்த கீதா கேல், தான் வேலை செய்யும் ஒரு வீட்டின் வேலை மற்றும் அதன்மூலம் தனக்கு மாதந்தோறும் கிடைத்துவந்த 4 ஆயிரம் ரூபாய் பறிபோனதால் வருத்தத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதல் கூறி புதிய விசிட்டிங் கார்ட்டை அடித்துக் கொடுத்திருக்கிறார், கீதா வேலை செய்யும் வீட்டின் எஜமானியான தனாஸ்ரீ ஷிண்டே.

குவிந்த வேலைவாய்ப்பு

குவிந்த வேலைவாய்ப்பு

மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்துவரும் தனாஸ்ரீ ஷிண்டே, கீதாவிற்காக புதிய கோணத்தில் விசிட்டிங் கார்ட்டை அடித்து 10 பிரதிகள் எடுத்து அக்கம் பக்கத்து வீட்டினருக்கு தந்துள்ளார். இதையடுத்து கீதாவிற்கு வேலை தர பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்ந்த போன்கால்கள்

தொடர்ந்த போன்கால்கள்

இந்த நிகழ்வை தனாஸ்ரீயின் தோழி, அஷ்மிதா ஜவ்டேகர் தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட, இந்தியா முழுவதும் இந்த விசிட்டிங் கார்டுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கீதாவிற்கு போன்கால்கள் குவிந்து வருகின்றன.

அதிகமானோர் பகிர்வு

அதிகமானோர் பகிர்வு

தனாஸ்ரீ ஷிண்டே மற்றும் கீதா கேல் குறித்த இந்த பதிவு, இரு தினங்களுக்கு முன்பு பதிவிடப்பட்ட நிலையில், ஆயிரத்தி 600 லைக்குகளையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்று பேஸ்புக்கில் வைரலாகியுள்ளது.

English summary
Pune's maid become famous with one business card
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X