For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: நீட் தோல்வி-திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை

நீட் தேர்வில் தோல்வியால் மாணவி தற்கொலை.

By Mathi
Google Oneindia Tamil News

திருச்சி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

One More TN girl commits suicide after failing to qualify NEET live updates

இன்றைய லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் பார்க்கலாம்

Newest First Oldest First
8:41 PM, 7 Jun

நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும் - பிரணாப் முகர்ஜி

சிலரை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு பன்முகத்தன்மையை பார்க்க முடியாது

சகிப்புத்தன்மை இல்லாதது தேசியவாதத்தை சீர்குலைக்கும்

தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவை - பிரணாப் முகர்ஜி

ஆர்எஸ்எஸ் ஆண்டு விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு

7:53 PM, 7 Jun

சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் பலி

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மீது சுவர் சரிந்து விழுந்தது

சிறுமிகள் தயான் (8), முஸ்கான் (4) பலி

7:51 PM, 7 Jun

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன்

ஜூனியர் அணிக்காக அர்ஜூன் தேர்வு

இலங்கையில் நடக்கும் போட்டியில் விளையாடுகிறார்

7:21 PM, 7 Jun

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

தகவல் திருட்டில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு நோட்டீஸ்

பயனாளர்களின் விவரங்களை பகிர்ந்தது பற்றி ஜூன் 20ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்

6:10 PM, 7 Jun

சமூக கருத்துகளைக் கொண்ட படம் என்பதால் காலாவை பார்த்தேன் - தமிழிசை

படத்தை அரசியலுடன் இணைந்துப் பார்த்தால் பிரிவைதான் ஏற்படுத்தும் - தமிழிசை

3:33 PM, 7 Jun

மதுரையில் காலா டிக்கெட் விற்பனையாகததால் விநியோகஸ்தர் கடத்தல்

500 டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிய அஜித், விக்னேஷ் ஏமாற்றம்

விற்பனையாகாத டிக்கெட்டுகளை விநியோகஸ்தரிடம் திரும்ப கொடுத்து பணம் கேட்டு மிரட்டல்

டிக்கெட் விற்பனையாகாத தகராறில் விநியோகஸ்தர் செல்வராஜ் கடத்தல்

எஸ்கே பிலிம்ஸ் செல்வராஜை கடத்தியதாக அஜித், விக்னேஷ் கைது

3:03 PM, 7 Jun

சமூக விரோதி என்ற ரஜினிகாந்த் மீது வழக்கு பதிய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

ஓசூரை சேர்ந்த சிலம்பரசன் ரஜினிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என ரஜினி கூறியதற்கு எதிர்ப்பு

2:16 PM, 7 Jun

பெங்களூரில் மந்த்ரி மாலில் காலா படம் வெளியாகிறது

பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் மந்த்ரி மாலில் காலா திரையிடப்படுகிறது

காலாவிற்கு எதிராக போராடிய கன்னட அமைப்பினர் கைது

2:15 PM, 7 Jun

கர்நாடகாவில் காலா படத்திற்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்

கன்னட அமைப்புகள் எதிர்ப்பால் டிக்கெட் விற்பனை நடக்காமல் இருந்தது

கர்நாடகாவில் சி நிறுவனம் காலாவை வெளியிடுகிறது

1:35 PM, 7 Jun

ஸ்டெர்லைட் ஆலை சி.இ.ஓ நாவடக்கத்துடன் பேச வேண்டும் : வைகோ எச்சரிக்கை

தமிழகத்தில் வளரும் பிள்ளைகளை நீட் மூலம் அழிப்பதே மத்திய அரசின் நோக்கம்: வைகோ

வட நாட்டவரை விட தென்னாட்டவர்கள் வீரமுள்ளவர்கள்: வைகோ ஆவேச பேட்டி

1:14 PM, 7 Jun

அரை மணி நேரத்தில் வெள்ளக் காடானது மும்பை

மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது

மும்பையில் உள்ளூர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது

12:56 PM, 7 Jun

மக்களுக்கு ஒரு நற்செய்தி.. வட தமிழகத்தில் மழை தொடருமாம்!

அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தகவல்

ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் - வானிலை மையம்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ மழை பெய்துள்ளது

12:49 PM, 7 Jun

விருத்தாச்சலம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்த 8-ம் வகுப்பு மாணவி

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் மாணவி மரணம்

மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் சாலை மறியல்

12:44 PM, 7 Jun

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதை எதிர்த்து சென்னை திருவொற்றியூரில் போராட்டம்

சென்னை துறைமுகம் முதல் மணலி வரை 14 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் குழாய் பதிக்க திட்டம்

11:52 AM, 7 Jun

சட்டசபை வளாகத்தில் அய்யாக்கண்ணு கைது
11:51 AM, 7 Jun

சென்னையில் ஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு கைது
11:35 AM, 7 Jun

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- கண்துடைப்புக்காக விசாரணை கமிஷன்: ஸ்டாலின்

துப்பாக்கிச் சூட்டுக்கு அதிகாரிகள் துணை போயுள்ளனர்

துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை தேவை- ஸ்டாலின்

தூத்துக்குடி மக்கள் பேரணியின் போது அதிகாரிகள் ஆள்மாறாட்டம்

அதிகாரிகள் ஆள்மாறாட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு- ஸ்டாலின்

11:32 AM, 7 Jun

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு

தமிழகத்தில் 4,000 செவிலியர்கள் நியமனம்- விஜயபாஸ்கர்

10:43 AM, 7 Jun

பெங்களூரின் பல தியேட்டர்களில் காலா திரையிடுவது ரத்து

கன்னட அமைப்பினர் தியேட்டர் வாசல்களில் போராட்டம் நடத்துவதால் முடிவு

காலையில் இருந்து கியூவில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்

பெங்களூர் ரசிகர்கள், ஒசூர், கிருஷ்ணகிரி தியேட்டர்களுக்கு படையெடுப்பு

9:45 AM, 7 Jun

தமிழகத்தில் இருப்பது மக்கள் விரோத ஆட்சி : டி.டி.வி தினகரன் கரூரில் பேட்டி

கமல் கர்நாடக முதல்வரை சந்தித்ததை நாங்கள் எதிர்க்கிறோம் : டி.டி.வி தினகரன்

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கால் தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்படைந்துள்ளது - டி.டி.வி தினகரன்

9:34 AM, 7 Jun

என்னை பிஆர்ஓ என கமல் கூறியதில் மகிழ்ச்சி - ஜெயக்குமார்

பிஆர்ஓ பணி ஒரு உன்னதமான பணி - ஜெயக்குமார்

கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும் - ஜெயக்குமார்

9:32 AM, 7 Jun

காலா திரைப்படம் வெளியிடும் தியேட்டர் ஊழியர் மீது தாக்குதல்

குண்டர்கள் தாக்கியதில் தியேட்டர் ஊழியர் படுகாயம்

பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பரபரப்பு சம்பவம்

9:24 AM, 7 Jun

நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்பு
9:18 AM, 7 Jun

நீட் தேர்வில் மாயமான பெண் பீகாரில் மீட்பு

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெற்றார் சென்னை மாணவி கோடீஸ்வரி

9:17 AM, 7 Jun

நாளை மறுதினம் முதல்வர் பழனிச்சாமி தூத்துக்குடி செல்கிறார்

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வாய்ப்பு

8:00 AM, 7 Jun

நீட் தோல்வி- மேலும் ஒரு மாணவி தற்கொலை

திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை

English summary
A 17-year-old girl from Tamil Nadu committed suicide after she failed to qualify NEET.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X