For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு வயதில் ஆம்பளையாய் மாறிய அபூர்வ ஆண் குழந்தை!! லட்சத்தில் ஒருவன் !!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பச்சிளம் குழந்தை அதீத வளர்ச்சியுடன் முழு ஆணுக்கு உரிய உறுப்புகளுடன் காட்சி அளித்தால் எந்த பெற்றோர்களால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? டெல்லியில் முழுவதும் வளர்ச்சியடைந்த பாலின உறுப்புக்களுடன் இருக்கும் ஒரு வயது குழந்தைக்கு டெல்லி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை லட்சத்தில் ஒருவனாம்.

டெல்லியைச் சேர்ந்த அந்த குழந்தை பிறக்கும்போதே அந்தக் குழந்தைக்கு டெஸ்டோஸ்டேரோன் அதிகமாக இருந்துள்ளது. ஒரு வயதை அடையும்போது 25 வயது இளைஞனுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டேரோன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

One-year-old infant develops fully grown sexual organs in Delhi

ஆறு மாதமாக இருக்கும்போதே அந்தக் குழந்தைக்கு உடல் ரீதியில் மாற்றம் ஏற்பட்டதை பெற்றோர் உணர்ந்துள்ளனர். மர்ம உறுப்பும் பெரிதாக இருந்துள்ளது.

முதலில் அதைப் பற்றி பெரிதாக நினைக்காத அந்தக் குழந்தையின் தாய், ''எங்களுடைய குழந்தை பொதுவாக பெரிய குழந்தையாக இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொண்டோம். எங்களது மாமியாரும் குடும்பத்தில் பல குழந்தைகளை வளர்த்துள்ளார். இந்தக் குழந்தையின் மாற்றம் வித்தியாசமாக தெரிந்தது என்று தெரிவித்துள்ளார்.

18 மாதத்தில் இந்தக் குழந்தைக்கு நார்மலாக இருக்கும் உயரத்தை விட 10-15 செ.மீ. அளவிற்கு அதிக உயரமாகவே இருந்துள்ளது. அப்போதுதான் சந்தேகமடைந்த பெற்றோர்கள் டாக்டர்களிடம் குழந்தையை காட்டியுள்ளனர். தற்போது மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குழந்தைக்கு இப்போதே செக்ஸ் உணர்வு இருக்கும். ஆனால், போகப் போகத்தான் தெரியும், அந்தக் குழந்தையின் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஹார்மோன் பிரச்சினை உள்ள குழந்தைகள் இந்தியாவில் லட்சத்தில் ஒருவர்தான் பிறப்பார்களாம்.

English summary
A one-year-old Indian boy has developed sexual organs of an adult man, and has been diagnosed with a rare hormonal condition that affects one in 100,000 children in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X