For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஒன் இந்தியா' குழுமத்திலிருந்து ஒடியா மொழியில் உதயமானது செய்தி வெப்சைட்!

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: அழகான கடற்கரைகள், கலாச்சார செழுமை, புராதான கோவில்கள்.. ஒடிசா பற்றி நினைத்ததும், நினைவுக்கு வருவது இவைதான். இப்போது அத்துடன், 'ஒன்இந்தியா ஒடியா' சேர்ந்து கொண்டுள்ளது.

ஆம்.. ஒன்இந்தியா குழுமத்திலிருந்து, லேட்டஸ்டாக, ஒடியா மொழி செய்தி இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இனி சுடச் சுட, செய்திகளை ஒரியா மக்கள் படிக்க முடியும். சுவையான கட்டுரைகளை வாசிக்க முடியும். இதுதான் ஒடியா மொழிக்கான ஒன்இந்தியாவின் வெப்சைட் முகவரி. https://odia.oneindia.com.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் செய்தி வெப்சைட்களை கொண்டுள்ள, இந்தியாவின் முன்னணி செய்தி இணையதளம் ஒன்இந்தியா. விளையாட்டு, லைஃப் ஸ்டைல், சினிமா, வாகனங்கள், வணிகம், தொழில்நுட்பம், சுற்றுலா என பல தரப்பட்ட வாசகர்களுக்காக தனித்தனி இணையதளங்களும் ஒன்இந்தியா குழுமத்திலிருந்து இயங்குகின்றன. இந்த மகுடத்தில், மற்றொரு மாணிக்கமாக சேர்ந்துள்ளது ஒடியா மொழிக்கான இணையதளம்.

ஒடிசா என்று முன்பு அழைக்கப்பட்ட ஒடிசா இந்தியாவில் மிகவும் பழமையான மாநிலங்களில் ஒன்றாகும். பழங்குடியின கலாச்சாரங்கள் மற்றும் பல புராதான இந்து கோவில்களுக்கு பெயர் பெற்ற இம் மாநிலம் பரப்பளவில் 8 வது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 11 வது பெரிய மாநிலமாகவும் உள்ளது.

தலைநகரம் புவனேஸ்வர் ஏராளமான கோயில்களின் தாயகமாகும். ஒடிசா அதன் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. இது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் வங்க கடலோரம் அமைந்த மாநிலம்.

ஒடிசா பல மதங்களின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்து மதம், பவுத்தம், மற்றும் சமண மதத்தின் கலாச்சார செழுமை அங்கு உண்டு. அசோகர் கலிங்கத்தை வென்றதும், புத்த மதம் இங்கு செழித்தோங்கியது. இதனால் ஏராளமான ஸ்தூபங்கள் மற்றும் கற்றல் மையங்கள் இங்கு குவிந்துள்ளன. சாந்த் பீமா பாய் போன்ற பல இந்து மத புனிதர்களின் வீடும் ஒடிசா தான்.

ஒடிசி இசை என்பது இம் மாநிலத்தின் பாரம்பரிய கிளாசிக்கல் இசை. 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒடிசி இசை, பூரி ஜெகந்நாதர், கோவிலில் சேவகம் செய்ய பிறந்த இசை எனப் புகழப்படுவது.

Naveen Patnaik

முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையில், ஒடிசா மாநிலம் பல மாநிலங்களை விட முன்னேறிவிட்டது. அவரது அரசாங்கத்தின் தற்போதைய குறிக்கோள், 5T என்பதுதான் (தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, குழுப்பணி மற்றும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் நேரம்). இதை செயல்படுத்துவதன் மூலம் அரசாங்க இயந்திரங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடியும். கொரோனாவுக்கு எதிரான சமீபத்திய போராட்டத்தில் கூட, உலக சுகாதார அமைப்பு இம் மாநிலத்தில் தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தது. நிர்வாகம் மற்றும் ஆளுகை என்று பார்த்தால், ​​ஒடிசா முதலிடத்தில் உள்ளது, பட்நாயக் ஒரு நிலையான அரசை வழங்கியுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில், நவீன் பட்நாயக் முதல்வராக 20 ஆண்டுகள் நிறைவு செய்தார், இது ஒரு சாதனை.

இப்படி, பல பெருமைகள் கொண்ட ஒடிசா மாநிலத்தின் பெருமைகளில், தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது ஒன் இந்தியா!

English summary
OneIndia, India’s leading language portal has launched a new portal in Odia. It would be your one stop shop for news, views, entertainment. In short, it will cover Odisha in its entirety along with national and international news as well in your favourite language Odia. https://odia.oneindia.com.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X