For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானாவில் முடிவுக்கு வராத பணத்தட்டுப்பாடு: 30 சதவீத வங்கி ஏடிஎம்களில் மட்டுமே பணம்

தெலுங்கானாவில் 30 முதல் 40 சதவீத ஏடிஎம்கள் வரை மட்டுமே இயங்குகின்றன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ

    டெல்லி: நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் தெலுங்கானாவில் 30 முதல் 40 சதவீத ஏடிஎம்கள் வரை மட்டுமே இயங்குகின்றன.

    வடமாநிலங்களில் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகின. பெரும்பாலான ஏடிஎம்கள் பணமில்லாமல் இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 86 சதவீத ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

    Only 30 % bank ATMs are working in Telangana

    ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில மாதங்களாகவே பணத்தட்டுப்பாடு இருந்து வந்தது. 70 சதவீத ஏடிஎம்களில் மட்டுமே பணம் இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் வியாழக்கிழமை நிலவரப்படி இரு மாநிலங்களிலும் 30 முதல் 40 சதவீத ஏடிஎம்கள் மட்டுமே இயங்குகின்றன. இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி தலைவரின் ரஜ்னீஷ் குமார் கூறுகையிலே வங்கிகளில் அதிகமானோர் பணத்தை டெபாசிட் செய்வதில்லை.

    இதுவே பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணமாகிறது. பீகாரில் 66 சதவீத ஏடிஎம்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்த நிலையை மாற்ற இன்று மாலைக்குள் அந்த மாநிலத்துக்கு ரிசர்வ் வங்கி பணத்தை கொண்டு செல்கிறது. ரூ.1,200 கோடி பீகாருக்கு அனுப்பப்பட உள்ளது என்றார் அவர்.

    English summary
    The finance ministry and RBI officials on Thursday said that the cash crunch witnessed in some parts of the country would improve by Friday evening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X