For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக்டவுன் எதிரொலி.. ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் மட்டும் சம்பளம் வழங்க முடிவு

Google Oneindia Tamil News

அமராவதி: முழு முடக்கம் காரணமாக ஆந்திராவில் இந்த மாதம் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் மட்டும் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது அம்மாநில அரசு.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் மே 3 வரை 49 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Only 50% of salaries for civil servants in andhra pradesh

இதனால் தொழில்கள் முடங்கின, மக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளுக்கு முடங்கினர். இதன் காரணமாக அரசுக்கு வரவேண்டிய வருவாய் முற்றிலும் குறைந்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு தினம் தோறும் 160 கோடி ரூபாய் வரி வருவாய் வர வேண்டிய நிலையில் ரூ.6 கோடி கூட வருவதில்லை என்று தெரிவித்தார். இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் 50 சதவீதம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சம்பளம் நிதிநிலை சரியான பின்னர் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெகன் அறிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா.. அமைச்சர் விளக்கம்மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா.. அமைச்சர் விளக்கம்

இந்நிலையில் ஊரங்கு நீட்டித்திருப்பதால் ஏப்ரல் மாதத்தற்கான சம்பளத்திலும் 50 சதவீதம் பிடித்தம் செய்து பின்னர் வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் தொகையில் 50 சதவீதம் பிடிக்கப்பட்டது. அதனால் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான பென்ஷன் தொகையை 100 சதவீதம் அப்படியே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் போலீஸ், மருத்துவம், சுகாதாரத்துறை, துப்புரவு ஊழியர்கள், தலைமை செயலக ஊழியர்கள் ஆகியோருக்கு முழு சம்பளத்தை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

Recommended Video

    தமிழக -ஆந்திர எல்லையில் எழுப்பப்பட்ட சுவர்.. போக்குவரத்துக்கு தடை - வீடியோ

    ஆந்திர மாநிலத்தில் 1177 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 81 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

    English summary
    andhra pradesh govt decided to pay Only 50% of salaries for civil servants
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X