For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்ட தமிழ்ப் பள்ளியை மூடிய பாஜக அரசு- தமிழர்கள் போராட்டம்

Google Oneindia Tamil News

அகமதாபாத்/சென்னை: குஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தமிழ்ப் பள்ளிக்கூடத்தை மாநில பாரதிய ஜனதா அரசு மூடியிருப்பதற்கு எதிரா அம்மாநில தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அகமதாபாத், மணிநகர் பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் செயல்படுவது போல குஜராத்திலு தமிழ்ச் சங்கங்கள் இயங்குகின்றன.

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம்- இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை கோரி மனுநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம்- இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை கோரி மனு

குஜராத் தமிழ் பள்ளி

குஜராத் தமிழ் பள்ளி

அகமதாபாத்தில் தமிழ்ப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. சுமார் 81 ஆண்டுகளாக குஜராத் வாழ் தமிழர்களுக்கு தமிழ் கற்றுத் தந்திருக்கிறது இந்த பள்ளி. இந்த பள்ளியில் படித்த பலரும் உயர் பதவியில் உள்ளனர்.

மூடியது பாஜக அரசு

மூடியது பாஜக அரசு

இந்த நிலையில் குஜராத் மாநில பாஜக அரசு, போதுமான மாணவர்கள் சேர்க்கை இல்லை என கூறி பள்ளியை மூடுவதாக அறிவித்தது. ஏற்கனவே 7 பள்ளிகளை குஜராத் அரசு மூடியிருக்கிறது. தற்போது தமிழர்களுக்கான மேல்நிலைப் பள்ளியையும் குஜராத் அரசு மூடுவதாக அறிவித்துள்ளது.

தமிழர்கள் போராட்டம்

தமிழர்கள் போராட்டம்

இதனைக் கண்டித்து குஜராத் வாழ் தமிழர்கள் கண்டனப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனிடையே குஜராத் தமிழ்ப் பள்ளிகள் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், குஜராத் அகமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அப்பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. குஜராத் அரசை தமிழக அரசு (@CMOTamilNadu) தொடர்பு கொண்டு தமிழ்ப்பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் மேல்நிலைப்பள்ளி பிரதமர் narendramodi அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மணிநகர் தொகுதியில் உள்ளது. தமிழ் மீது பற்று கொண்ட பிரதமர் @PMOIndia தலையிட்டு தமிழ்ப் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! என வலியுறுத்தி உள்ளார்/

English summary
Only Tamil school in Gujarat closed by BJP Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X