For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓப்போ எப் 7: புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் போன், ரூ.21,990 விலையில்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    OPPO F7 : ரூ.21,990 விலையில் புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் போன்

    ஓப்போ எப்7 போனை 20018, மார்ச் 26ம் தேதி அறிமுகம் செய்துவிட்டது ஓப்போ. ஓப்போ எப் 7ல் இருக்கும் 25எம்பி கேமராவினால் அதிக துல்லியமான செல்பி புகைப்படங்களை எடுக்க முடியும். இதில் இருக்கும் இமேஜ் சென்சார்கள் மிகவும் துல்லியமாக புகைப்படம் எடுக்க உதவும். இதில் இருக்கும் சென்சார்கள் திறன் காரணமாக மிகவும் குறைந்த ஒளியிலும், அதிக ஒளியிலும் புகைப்படம் எடுக்க முடியும்.

    செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த வகை போன், ரூ. 21,990 என்ற சாதாரண விலையிலேயே கிடைக்கிறது. 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ள போன்கள் விலை ரூ.26,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    OPPO F7: First Impressions Of The New “Selfie Expert”, At A Price Of Rs. 21,990!

    ஏற்கனவே அறிவித்தபடி இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரால் மும்பையில் வைத்து, இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.

    7.5 மி.மி தடிமனும், 158 கிராம் எடையும் மட்டுமே இருப்பதால், எப்7 போன்கள் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். சோலார் ரெட், டயமண்ட் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர் ஆகிய மூவர்ணங்களில் போன் விற்பனைக்கு கிடைக்கும். 1080×2280 பிக்சல்கள் கொண்ட போன் என்பதால், படிப்பதற்கும், கேம்களுக்கும் துல்லியத்தன்மையை கொடுக்கும்.

    OPPO F7: First Impressions Of The New “Selfie Expert”, At A Price Of Rs. 21,990!

    ஆப்-இன்-ஆப் என்ற வசதி கொண்ட இந்த வகை போனில், கேம் ஆடிக்கொண்டிருக்கும்போதே, இன்கம்மிங் அழைப்புகளையும் எடுத்து பேச முடியும். கண்டிப்பாக ஓப்போ போன்கள் மீதான எதிர்பார்ப்பான கேமரா விஷயத்திலும் எப் 7 மேம்பட்டே உள்ளது. செல்ஃபி அனுபவத்தை உச்ச்ததில் கொண்டு போகும் வகையில் கேமராக்கள் உள்ளன. 16 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமராவையும், 25 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது இந்த போன்கள்.

    ஓப்போ எப் 7 மாடல் போனில் இருக்கும் ஏஐ 2.0 பியூட்டி வசதி மூலம் இதில் புகைப்படங்களை இன்னும் எளிதாக அழகாக மாற்றலாம். இதன் மூலம் போட்டோக்களில் இருக்கும் மனிதர்களின் தோல் நிறம், கண்களின் அமைப்பு, முடி என எல்லாவற்றையும் மாற்ற முடியும். மக்களின் நிறம், வயது, பால் பொறுத்து இதில் நிறைய மாற்றங்கள் செய்யலாம். இதில் ஏஐ மூலம் இயங்க கூடிய எடிட்டிங், ஆல்பம் வசதியும் இடம்பெற உள்ளது. மேலும் இதில் நிறைய ஏஆர் ஸ்டிக்கர் வசதியும், கவர் ஷாட் வசதியும் போட்டோக்களை இன்னும் அழகாக மாற்ற உதவும். கவர் ஷாட் என்ற வசதி மூலம் போட்டோக்கள் கலர், உடையின் கலர், பின் பக்கத்தின் கலர் என பலவற்றை மாற்ற முடியும்.

    OPPO F7: First Impressions Of The New “Selfie Expert”, At A Price Of Rs. 21,990!

    ஓப்போ எப் 7 மாடல் போனில் 6.23 இன்ச் பெரிய எச்டி டிஸ்பிளே இருக்கிறது. மேலும் இதில் சூப்பர் புல் -ஸ்கிரீன் 2.0 பேனல் இடம்பெற்று இருக்கிறது. ஸ்கிரீனுக்கும் போனுக்கும் 10.9 சதவிகித இடைவெளி மட்டுமே இருக்கிறது.

    English summary
    The wait is over. On March 26th, 2018, the “Selfie Expert And Leader”, OPPO, finally lifted the curtains on its much-awaited flagship device—the OPPO F7.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X