For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: மோடி அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள்.. எதிர்ப்பு 126

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

    டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    அதனை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 20ஆம் தேதியான இன்று விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்று சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

    2003ஆம் ஆண்டுக்கு பின்

    2003ஆம் ஆண்டுக்கு பின்

    அதன்படி லோக்சபாவில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கடந்த 2003ஆம் தேதி அவரது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    பாஜக அரசு மீது

    பாஜக அரசு மீது

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அதே பாஜக அரசு மீது தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    நேரம் ஒதுக்கீடு

    நேரம் ஒதுக்கீடு

    இன்று லோக்சபா கூடியதும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்றது. இதற்காக ஒவ்வொரு கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.

    பாஜகவுக்கு ஆதரவு

    பாஜகவுக்கு ஆதரவு

    இதைத்தொடர்ந்து இரவு 11 மணியளவில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்த நிலையில் மின்னனு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மோடி அரசு வெற்றி

    மோடி அரசு வெற்றி

    இதில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது. அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 325 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

    நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

    எதிர்க்கட்சிகளுக்கு 126 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. மொத்தம் 451 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்.

    சபாநாயகர் அறிவிப்பு

    சபாநாயகர் அறிவிப்பு

    இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முன்னிட்டு டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

    English summary
    Opponent parties brings no cofindence motion on Central govt today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X