For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் திட்டம்.. ஸ்டாலினின் பிளான்படி நடக்கும் எதிர்க்கட்சிகள்.. தேசிய அளவில் கவனம் பெறும் திமுக!

லோக்சபா தேர்தலுக்கு பின் நடக்க போகும் பெரும்பாலான விஷயங்கள் திமுக தலைவர் ஸ்டாலினின் திட்டப்படி நடக்கும் என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினின் பிளான்படி நடக்கும் எதிர்க்கட்சிகள்- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் நடக்க போகும் பெரும்பாலான விஷயங்கள் திமுக தலைவர் ஸ்டாலினின் திட்டப்படி நடக்கும் என்று கூறுகிறார்கள். இதற்கான அறிகுறிகள் இப்போதே தென்பட தொடங்கிவிட்டது.

    லோக்சபா தேர்தலில் இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. 7ம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் கூட்டணி தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ஸ்டாலினின் வாய்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் பெறுகிறது.

    கருத்து சொன்னால் கருத்தால் எதிர்கொள்ளுங்க.. கல்லை எடுத்து அடித்தால் எப்படி.. ஜோதிமணி கருத்து சொன்னால் கருத்தால் எதிர்கொள்ளுங்க.. கல்லை எடுத்து அடித்தால் எப்படி.. ஜோதிமணி

    நிலைமை என்ன

    நிலைமை என்ன

    தற்போது வரை வந்த கருத்த கணிப்புகள் படி, லோக்சபா தேர்தலுக்கு பின் மூன்று விதமான முடிவுகள் மட்டுமே வர வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    1. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறுவது.

    2. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை பெறுவது.

    3. மாநில கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி அமைப்பது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் மாநில கட்சிகள் வேறு விதமான திட்டம் ஒன்றை மனதில் வைத்து இருந்தது. அதாவது காங்கிரஸ் பாஜக இரண்டு தேசிய கட்சிகளும் இல்லாமல் மாநில கட்சிகள் மட்டும் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காகத்தான் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார்.

    ஒப்புக்கொண்ட தலைவர்கள்

    ஒப்புக்கொண்ட தலைவர்கள்

    இதற்கு மாநில தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். காங்கிரஸ் இல்லாத கூட்டணியும் நல்ல கூட்டணிதான் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தெரிவித்து உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக இல்லாத பெரிய கூட்டணி தேசிய அளவில் உருவாவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டது. ஆலோசனைக்கான அறிவிப்புகளும் வெளியானது.

    ஸ்டாலின் இல்லை

    ஸ்டாலின் இல்லை

    ஆனால் ஸ்டாலின் மட்டும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காங்கிரஸ் இல்லாத கூட்டணியில் கண்டிப்பாக திமுக இடம்பெறாது என்று எதிர்கட்சிகளிடம் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். இதனால் தற்போது ஸ்டாலினின் பிளான்படி காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.

    என்ன கேம்

    என்ன கேம்

    ஸ்டாலினின் ஆலோசனைப்படி காங்கிரஸ் கட்சி இல்லாமல் மாநில காட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது. அதிக பட்சம் மாநில கட்சிகள் எல்லாம் சேர்த்து 220 இடங்களை மட்டும் வெல்ல முடியும். அதனால் காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்றுக்கொண்ட கட்சிகள்

    ஏற்றுக்கொண்ட கட்சிகள்

    ஸ்டாலினின் இந்த யோசனையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. இதையடுத்து ஏற்பட்ட சுமுக தீர்வை அடுத்துதான் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க கூட தயாரானது. ஆம் நேற்றே குலாம் நபி ஆசாத், பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பின்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதான் நடக்க போகிறது

    இதுதான் நடக்க போகிறது

    ஆகவே லோக்சபா தேர்தலுக்கு பின் உருவாகும் மூன்றாவது கூட்டணிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளிக்கும். முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும். பிரதமர் பதவியை மாநில கட்சிக்கு விட்டுக்கொடுக்கும். மாநில தலைவர் ஒருவர் பிரதமராக ஆவார் என்கிறார்கள்.

    திமுக ஏன்

    திமுக ஏன்

    இதனால் தற்போது தேசிய அளவில் திமுக மிக முக்கியமான முடிவெடுக்கும் அதிகாரமாக மாறியுள்ளது. அதனால்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூட்டணி பேச்சுவார்த்தைக்கான முதல் கடிதத்தை ஸ்டாலினுக்கு அனுப்பி இருக்கிறார். சந்திரசேகர ராவும் ஸ்டாலினை காத்திருந்து பார்த்தது இதனால்தான் என்கிறார்கள்.

    English summary
    Opponents parties follow the footsteps of M K Stalin to form the new government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X