For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரை அழித்த பிறகு வெளியேறியுள்ளது பாஜக.. கேஜ்ரிவால் காட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்- வீடியோ

    டெல்லி: காஷ்மீரை அழித்த பிறகு ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளது பாஜக என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார்.

    காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் வாங்கியுள்ளது. இதனால் அங்கு மெஹபூபா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 3 ஆண்டுகால கூட்டணி ஆட்சி இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

    Opposition leaders slam BJP for withdrawing alliance in Kashmir

    இதுகுறித்து கேஜ்ரிவால் வெளியிட்ட ட்வீட்டில், அழிவை ஏற்படுத்திய பிறகு காஷ்மீரில் இருந்து பாஜக வெளியேறியுள்ளது என காட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல்கள், தீவிரவாதிகள் தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்த நிலையில் கேஜ்ரிவால் அதை குறிப்பிட்டு இவ்வாறு ட்வீட் செய்திருப்பதாக தெரிகிறது.

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்ட ட்வீட்டில், அது கடந்துவிட்டது என கூறியுள்ளார். பாஜக ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேறிவிட்டது என்று இவ்வாறு அவர் கேலியாக கூறியிருப்பதாக தெரிகிறது.

    English summary
    Opposition leaders slam BJP for withdrawing alliance with PDP in Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X