For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காசியாபாத் எல்லையில் கனிமொழி, திருமாவளவன்...விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு

Google Oneindia Tamil News

காசியாபாத் : காசியாபாத் எல்லை பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சென்றுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்திப்பதற்காக பஞ்சாப் அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் பாதல் தலைமையில் தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த திமுக எம்.பி.,க்கள் கனிமொழி, திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் நடைபயணமாக சென்றுள்ளனர்.

Opposition parties walking toward Ghazipur border which that farmers protest site

இது பற்றி திருமாவளவன் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு மேலாக புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திப்பதற்காக காசியாபாத் எல்லைக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம். பஞ்சாப் முன்னாள் அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் பாதல் அவர்களின் முன்னெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குழு விவசாயிகளை சந்திக்க செல்கிறோம்.

விவசாயிகள் சாலை மறியல்... நெடுஞ்சாலையான வயல்வெளிகள்... மக்கள் வேதனைவிவசாயிகள் சாலை மறியல்... நெடுஞ்சாலையான வயல்வெளிகள்... மக்கள் வேதனை

பாதிக்கப்பட்டுள்ள, போராடிக் கொண்டிருக்கிற மக்களை சந்திப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நானும் (தொல்.திருமாவளவன்) தோழர் ரவிக்குமார் அவர்களும் செல்கிறோம் என்றார். காலை 9.30 மணி துவங்கி தொடர்ந்து அவர்கள் நடைபயணமாக சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல்தடுப்பரணைத் தாண்டி நூறு மீட்டர் கடந்து சென்றோம். துணை இராணுவத்தினர் மீண்டும் வந்து மறித்தனர். மீறி நடந்தோம். அடுத்த தடுப்பை நெருங்கியதும் இங்கே நிற்கவே கூடாது; திரும்பிச் செல்லுங்கள் என்று தடித்தக் குரலில் கத்தினர். அப்போது மோடி அரசைக் கண்டித்து எதிர்க்குரல் எழுப்பினோம் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்களையும் அவர் ட்விட்டரில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். 100 மீட்டர் தாங்கள் நடந்து செல்வதாகவும், துணை ராணுவத்தினரின் தடுப்புக்களை மீறி செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Opposition parties including tamilnadu members of parliment walking towards Ghazipur border which that farmers protest site
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X