For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா அணி மீது கிரிமினல் நடவடிக்கை.... தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு புகார்!

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சசிகலா அணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி அதிமுக அம்மா அணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்று ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி உரிமை கொண்டாடியதால் சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில் இருஅணிகளும் சின்னம் தொடர்பாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

OPS faction Mythreyan accused that the documents submitted by Sasi faction at ECI are fake

ஜுன்16ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் சசிகலா அணி லட்சக்கணக்கில் லாரி லாரியாக பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தன. இந்த பிரமாணப் பத்திரங்களை படித்து முடிக்கவே 10 ஆண்டுகள் ஆகும் என்று விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் சசிகலா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டவை அனைத்தும் போலி ஆவணங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மைத்ரேயன் மற்றும் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன் எம்.பி, சசிகலா அணி லட்சக்கணக்கில் தாக்கல் செய்துள்ளவற்றில் பல போலியான ஆவணங்கள். வேண்டுமென்றே கால தாமதம் ஏற்படுத்தும் விதமான

மேலும் காலஅவகாசம் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார்கள் இதனை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மனோஜ்பாண்டியன் சசிகலா அணி அளித்துள்ள பத்திரங்கள், கையெழுத்தகள் போலியானவை என்று ஆதாரத்துடன் தேர்தல்ஆணயைத்திடம் அளித்துள்ளோம். போலி ஆவணங்களை தயாரித்தவர்கள் அவர்களுக்கு துணை நின்றவர்கள் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

English summary
OPS faction submitted reports claiming that Sasikala faction submitted documents are fake and take legal action against them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X