For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி 'குட்புக்கில்' ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்! தேனியில் காலில் விழுந்தார்.. வாரணாசிக்கும் விரைந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections 2019: மோடி வேட்பு மனு தாக்கல் பேரணி...கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு- வீடியோ

    வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மூத்த தலைவர்கள் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினர்.

    வாரணாசியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய பிரமாண்ட ரோடு ஷோவில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் பங்கேற்றார்.

    இன்று காலை, வாரணாசியில், பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் பாஜக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து.. தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து.. தேர்தல் ஆணையம்

    ஓபிஎஸ் மகன்

    ஓபிஎஸ் மகன்

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி ஆகிய அதிமுக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, புருவங்களை உயர்த்த வைத்துள்ளார். பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த பிறகு இவர்கள் சென்னை திரும்ப உள்ளனர்.

    தேனியில் காலில் விழுந்தார்

    தேனியில் காலில் விழுந்தார்

    லோக்சபா தேர்தலின்போது தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மோடி தேனி வருகை தந்தார். அப்போது, மேடையிலேயே அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் ரவீந்திரநாத். மோடி தடுத்தும் கூட ரவீந்திரநாத் கட்டாயப்படுத்துவதை போல காலில் விழுந்தார். அப்போதே இந்த காட்சிகள் வைரலாகின. இப்போது மோடி வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அதிமுக முக்கிய தலைவர்களுடன் ஒருவராக இப்போதுதான் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள ரவீந்திரநாத்தும் வாரணாசி சென்றுள்ளார்.

    மோடி அறிமுகம்

    மோடி அறிமுகம்

    மோடியின் அறிமுகம் ரவீந்திரநாத்துக்கு அவசியம் என்று ஒரு 'நல்ல தந்தையாக' ஓ.பன்னீர் செல்வம் நினைத்து அதற்கேற்ப காய் நகர்த்துவதுதான் இதற்கு காரணம் என்று தெரிகிறது. அதிமுகவின் முகங்களில் ஒருவரான ரவீந்திரநாத்தை மாற்றுவதில் ஓபிஎஸ் ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிட்டார்.

    குட்புக்

    குட்புக்

    தேனியில் காலில் விழுந்தது, வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது அதில் பங்கேற்றது போன்றவற்றின் மூலம், மோடியின் குட்புக்கில் ரவீந்திரநாத் இடம் பிடித்துவிட்டார். ஓ.பன்னீர் செல்வத்தின் ஸ்மார்ட் மூவ் இது என்கிறார்கள், அதிமுகவில் அவருக்கு நெருக்கமாக உள்ளவர்கள்.

    English summary
    Tamilnadu dy cm o.pannerselvam took part in, Amit Shah meeting in Varanasi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X