For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: போட்டியிட்ட 81 பெண்களில் 6 பேர்தான் எம்.எல்.ஏ.

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 81 பெண்களில் வெறும் 6 பேர் மட்டுமே வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லவுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 81 பெண்களில் வெறும் 6 பேர் மட்டுமே எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 11-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின.

Out of 81 women contestants only 6 have won in Punjab State Assembly 2017

இதில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 81 பெண் வேட்டபாளர்கள் போட்டியிட்டனர். அவர்களுள் வெறும் 6 பேர் மட்டுமே பெற்றுள்ளனர். இது சட்டசபை பலத்தில் வெறும் 5% மட்டுமே ஆகும்.

வெற்றி பெற்றுள்ள 6 பெண்களில் மூவர் ஆம் ஆத்மி கட்சியையும், மீதமுள்ள 3 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் ஆவர். கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 93 பெண்கள் போட்டியிட்டு 14 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Only six of the 81 women candidates managed to secure a place in the 117-member Punjab Assembly, merely 5 percent of the House's strength.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X