For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட்டில் பரபரப்பு.. ரகுபர் தாஸ்க்கு எதிராக முதல்வராகும் ஹேமந்த் சோரன் போலீசில் புகார்!

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக பதவி ஏற்க உள்ள ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ள ரகுபர் தாஸ்க்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.

தன்னை சாதி ரீதியாக தேர்தலின் போது ஆட்சேபனைக்குரிய வகையில் ரகுபர்தாஸ் பேசியதாக போலீசில் கடந்த டிசம்பர் 19ம் தேதி ஹேமந்த் சோரன் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை ஏற்று ரகுபர் தான் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.

ஜாரக்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி ராஞ்சியில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

அனுபவத்துல சொல்றேன்.. 3 தலைநகரங்கள் வேணவே வேணாம்.. ஜெகனை எச்சரிக்கும் வெங்கைய நாயுடு அனுபவத்துல சொல்றேன்.. 3 தலைநகரங்கள் வேணவே வேணாம்.. ஜெகனை எச்சரிக்கும் வெங்கைய நாயுடு

சாதி ரீதியாக பேசினார்

சாதி ரீதியாக பேசினார்

ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலம் மிகிஜாம் காவல் நிலையத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் மீது கடந்த டிசம்பர் 19ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரில் ரகுபர் தாஸ் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை சாதி ரீதியாக அவதூறாக விமர்சித்ததாக கூறியுள்ளார்.

போலீஸ் தகவல்

போலீஸ் தகவல்

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் முதல்வர் ரகுபர் தாஸ்க்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். இந்த தகவலை ஜம்ரதா மாவட்ட எஸ்பி அனுஷ்மான் குமார் தெரிவித்தார். எஸ்சி எஸ்டி தடுப்பு சட்டத்தின் கீழ் ரகுபர் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டும்காவில் புகார்

டும்காவில் புகார்

முன்னதாக இந்த புகார் குறித்து புதன்கிழமை ஜம்தாராவின் மிஹிஜாமில் நடந்த கருத்துக் கணிப்புக் கூட்டத்தில் பேசிய ஹேமந்த் சோரன், எனது சாதி மீது ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்திய முதல்வர் மீது டும்காவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

சோரன் கேள்வி

சோரன் கேள்வி

மேலும் சோரன் கூறுகையில், ரகுபர் தாஸின் வார்த்தைகள் என் உணர்வையும் மரியாதையையும் புண்படுத்திவிட்டது. ஒரு பழங்குடி குடும்பத்தில் பிறப்பது குற்றமா? என்று தெரிவித்து இருந்தார்.

English summary
outgoing Jharkhand Chief Minister Raghubar Das booked for making objectionable remarks on Jharkhand Mukti Morcha (JMM) working president Hemant Soren's caste.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X