For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிஷாவில் 4 கோடி மக்கள் தொகையில் 1 கோடி பேர் எழுத்தறிவில்லாதவர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் உள்ள 4.2 கோடி மக்கள் தொகையில் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என அம்மாநில கல்வி அமைச்சர் தேபி பிரசாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஒடிஷா மாநில சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. திலீப் ராய் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தேபி பிரசாத் மிஸ்ரா அளித்த பதில்:

Over 1 crore illiterate people in Odisha

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒடிஷா மக்கள் தொகை 4.2 கோடி. இதில் 1.01 கோடி பேர் எழுத்தறிவில்லாதவர்கள். இவர்களில் 32.72 லட்சம் பேர் ஆண்கள். 69.27 லட்சம் பேர் பெண்கள்.

ஜாதி அடிப்படையில் 28.96 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களும் 53.73 லட்சம் பழங்குடி மக்களும் கல்வி அறிவு இல்லாதவர்கள். சக்ஸார் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 19 மாவட்டங்களில் 27.77 லட்சம் பேருக்கு கல்வி அறிவு புகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

English summary
More than one crore people in Odisha are illiterate, School and Mass Education Minister Debi Prasad Mishra said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X