For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2013ம் ஆண்டில் மட்டும் விதிமுறைகளை மீறிய 10,043 வெளிநாட்டவர்கள் கைது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்தாண்டு மட்டும் விதிமுறைகளை மீறியதாக வெளிநாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரன் ரிஜ்ஜு இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறப்பட்டுள்ளதாவது :-

கடந்தாண்டு மட்டும்...

வெளிநாட்டவர்களுக்கான சட்டம் மற்றும் குடியேற்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 43 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு முந்தைய ஆண்டுகளில்....

2012ம் ஆண்டு 7484 பேரும், 2011ல் 7345 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விதிமீறல்கள் தொடர்பாக கைது செய்யப்படும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

கண்காணிப்பு...

குடியேற்ற சோதனைச் சாவடிகளில் உயர்தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி கண்காணிக்கப் படுகின்றனர்.

முக்கியக் காரணம்....

அது மட்டுமின்றி, குடியேற்ற ஊழியர்களும் மற்ற பாதுகாப்பு அமைப்பினரும் பயண ஆவண முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளதால் இந்த அளவுக்கு அதிகமாக வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Minister of State for Home Affairs Kiren Rijiju told Rajya Sabha in a written reply that while 10,043 foreigners were arrested in 2013, the corresponding figures for the years 2012 and 2011 stood at 7,484 and 7,345 respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X