For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு.. மகர விளக்கு வழிபாடு 17ம் தேதி தொடக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை மறு ஆய்வு வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் !

    சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு வழிபாடு 17ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அங்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு உள்ளார்கள்.

    உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அயப்பன் கோவில் கேரள மாநிலத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மகர விளக்கு வழிபாடு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மகர விளக்கு வழிபாடு வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

    Over 10,000 police personnel to Be Deployed In Sabarimala For Two-Month Pilgrimage

    இதையொட்டி ஐந்து கட்டங்களாக சபரிமலை அய்யப்பன் கோவிலிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் 10 ஆயிரத்து 17 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கேரள மாநில காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது பற்றி கேரள மாநில டிஜிபி லோக்நாத் பெஹரா திருவனந்தபுரத்தில் நேற்று கூறுகையில், இந்த ஆண்டு சபரிமலை சீசனில் பாதுகாப்பு மிகவும் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    இதனிடையே டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், 24 போலீஸ் சுப்பிரண்டுகள் மற்றும் உதவி சுப்பிரண்டுகள், 112 துணை போலீஸ் சுப்பிரண்டுகள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1185 சப் இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கோவில் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றிலும் 8,402 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 307 பேர் பெண் போலீசார் ஆவர்.

    முதல்கட்டமாக வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை 2551 பேர் சன்னிதானத்திலும், பம்பை, நிலக்கல், பத்தணம்திட்டாவிலும்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

    English summary
    Over 10,000 Cops To Be Deployed In Sabarimala Lord Ayyappa temple during the two-month long pilgrimage season starting November 17.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X