For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லீம் கைதிகளுடன் இணைந்து ரமலான் நோன்பு இருக்கும் இந்துக் கைதிகள்

Google Oneindia Tamil News

முசாபர்நகர்: உத்திரப்பிரதேசத்தில் முஸ்லீம் கைதிகளுடன் இணைந்து இந்துக் கைதிகளும் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலான இந்த செயல் பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள மாவட்ட சிறையில் 1150 முஸ்லீம் கைதிகள் உள்ளனர். இவர்கள் தற்போது ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து அங்குள்ள 65 இந்துக் கைதிகளும் தினசரி நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

Over 60 Hindu inmates keep roza with 1,150 Muslims in Muzaffarnagar

ரமலான் நோன்பின் முதல் நாளான நேற்று முஸ்லீம் கைதிகளுடன் இந்துக் கைதிகளும் நோன்பு கடைப்பிடித்ததாக ஜெயிலர் சதீஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.

கைதிகள் நோன்புக் காலத்தின்போது தொழுகை நடத்த வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எந்தக் குறையம் இல்லாத வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்தாகவும் அவர் கூறியுள்ளார்.

நோன்பு காலத்தில் உலர் பழங்கள், பேரீச்சம்பழம், அரை லிட்டர் பால், ஸ்னாக்ஸ் உள்ளிட்டவையும் கைதிகளுக்கு தரப்படுகிறது.

English summary
Setting an example of communal harmony, more than 60 Hindu inmates of the district jail here are keeping 'roza', the dawn-to-dusk fast during Ramzan, along with 1,150 Muslim inmates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X