For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

50 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் குடும்பங்களிடம் ரிஷி மூலம், நதி மூலம் கேட்க முடியுமா?- ப.சி.

Google Oneindia Tamil News

சென்னை: 50 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் குடும்பங்களிடம் ரிஷி மூலம், நதி மூலம் கேட்க முடியுமா என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் கொதித்தெழுந்தது. அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மேலும் டெல்லி, கர்நாடகம், தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஜாப்ராபாத் பகுதியிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளியின் சீராய்வு மனு மீது மதியம் 1 மணிக்கு தீர்ப்பு நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளியின் சீராய்வு மனு மீது மதியம் 1 மணிக்கு தீர்ப்பு

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த சட்டத்தை திரும்பப் பெற கோரி காங்கிரஸ் கட்சியும் தேசத்தை காப்போம் என்ற பேரணியை நடத்தியது. அது போல் அக்கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரம் தனது ட்விட்கள் மூலம் இந்த சட்டத்திற்கு தனது எதிர்ப்பை காட்டி வருகிறார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய மக்கள் மீது வன்முறை, வேற்றுமை, பாகுபாடு ஏவிவிடப்படலாம் என்பதற்கு கிழக்கு பாகிஸ்தான் வங்க தேசமாக மாறிய வரலாறே உதாரணம்.

5 காசுக்கு

5 காசுக்கு

1971-ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்களை இந்தியா வரவேற்றது என்பது மறந்துவிட்டதா? அந்த அகதிகளின் பராமரிப்புக்காக கூடுதல் தபால் தலை (ஸ்டாம்ப்) 5 காசுக்கு மனமுவந்து ஒட்டினோம் என்பது மறந்துவிட்டதா?

பெரும்பான்மையோர்

பெரும்பான்மையோர்

அப்படி வந்த அகதிகளில் பெரும்பான்மையோர் வங்க தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள். இந்தியாவில் தங்கி விட்டவர்களை மத வேறபாடு இல்லாமல் மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டாமா? 50 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் குடும்பங்களிடம் ரிஷி மூலம், நதி மூலம் கேட்க முடியுமா?

English summary
Ex Former Finance Minister P.Chidambaram in his twitter page says that how can we ask proves from the people who is living in India for the past 50 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X