For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேணும்னா டாஸ் போட்டு முடிவு செய்யலாமா.. ஜெட்லியை கிண்டல் செய்யும் சிதம்பரம்

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து, பூவா தலையா போட்டு பார்த்து கண்டுபிடிக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விரும்புகிறாரா என்று, முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர், ஹாலண்டே தெரிவித்தார்.

இதனால் மத்திய அரசு விளக்கம் அளிக்க காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

மறுப்பு

மறுப்பு

மத்திய அரசு தரப்பிலோ, இதில் முறைகேடு நடக்கவில்லை, ரிலையன்ஸ் நிறுவனத்தை தாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசும், இதேபோன்ற விளக்கத்தை கொடுத்துள்ளது. இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி அளித்த விளக்கத்திற்கு ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

இரு முகங்கள்

உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்கிறார் நிதி அமைச்சர் திரு ஜெட்லி. முற்றிலும் சரி. எந்த முகம் உண்மை முகம் என்று எப்படி கண்டு பிடிப்பது?

டாஸ் போடலாமா

இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது. இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது. நிதி அமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ?

விசாரணையே வழி

ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை.

English summary
P.Chidambaram slam Arun Jaitley in twitter, over Rafale deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X