For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி, டாக்டர் சாந்தாவுக்கு பத்ம விபூசன்.. சானியாவுக்கு பத்மபூசன்: பிரணாப் முகர்ஜி வழங்கினார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர் சாந்தா ஆகியோருக்கு பிரணாப்முகர்ஜி பத்மவிபூசன் விருதினை வழங்கி கவுரவித்தார். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு பத்மபூசன் விருது வழங்கப்பட்டது.

நடப்பாண்டு 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 10 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 83 பேருக்கு பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 28ம் தேதி திருபாய் அம்பானி, சாய்னா நெய்வால், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விபூஷன் , பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கி கவுரவித்தார்.

இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை பிரியங்கா சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்பட எஞ்சிய 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

112 பேரில் 19 பேர் பெண்கள், 10 வெளிநாட்டவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், மறைவுக்குப் பிறகு 4 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா வில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய விருது பத்ம விபூஷண். ஏற்கெனவே பத்ம பூஷண் விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நடப்பாண்டு பத்ம விபூஷண் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்மவிபூசன்

பத்மவிபூசன்

ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய மறைந்த தொழிலதிபர் தீருபாய் அம்பானி, வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஊடக தொழிலதிபர் ராமோஜி ராவ் ஆகியோருக்கும் பத்ம விபூஷண் நடப்பாண்டு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சாந்தா

மருத்துவர் சாந்தா

அடையாறு புற்றுநோய் ஆய்வு மைய தலைவர் டாக்டர் வி. சாந்தா, பரதநாட்டியம், குச்சிப்புடி கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக சங்கீத வாய்பாட்டுக் கலைஞர் கிரிஜா தேவி, அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார நிபுணர் அவினாஷ் தீட்சித் ஆகியோருக்கும் பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது.

சானியா மிர்சா

சானியா மிர்சா

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மறைந்த ஆன்மிக தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி தேஜோமயானந்தா, பாடகர் உதித் நாரயண், சிற்பி ராம் வி. சுடர், மணிப்புரி நாடக கலைஞர் ஹேய்ஸ்னம் கன்ஹய்லால், இந்தி, தெலுங்கு எழுத்தாளர் யர்லகட்டா லட்சுமி பிரசாத், சமஸ்கிருத அறிஞர் என்.எஸ். ராமானுஜ தட்டாச்சார்யா, பஞ்சாப் செய்தியாளர் பர்ஜிந்தர் சிங் ஹம்தார்ட், இரைப்பை குடல் மருத்துவர் டி. நாகேஷ்வர் ரெட்டி, விஞ்ஞானி ஏ.வி. ராமா ராவ் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா, மறைந்த நடிகர் சயீத் ஜெப்ரி, மாஸ்டர்கார்டு தலைமைச் செயல் அதிகாரி அஜய்பால் சிங் பங்கா, டெல்லியின் அனில் குமாரி மல்ஹோத்ரா, எம்.வி. பத்மா ஸ்ரீவஸ்தவா, குஜராத்தின் சுதிர் வி.ஷா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

English summary
President Pranab Mukherjee on Tuesday honoured 56 eminent personalities with Padma awards at the Civil Investiture Ceremony to be held at Rashtrapati Bhavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X