For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விராட் கோஹ்லி, சாக்ஷி மாலிக், மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது.. பிரணாப் வழங்கினார்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, சாக்‌ஷி மாலிக், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு பதமஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம்.

'Padma Shri' Virat Kohli felicitated by President Pranab Mukherjee at Rashtrapati Bhawa

இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.

அதன்படி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, தீபா மாலிக், தீபா கர்மாகர், சாக்‌ஷி மலிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. கண்பார்வையற்றோருக்கான கிரிக்கெட் வீரர் சேகர் நாயக்கிற்கும் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Indian cricket skipper Virat Kohli, Paralympian Deepa Malik and hockey captain PR Sreejesh were honoured with the Padma Shri by President Pranab Mukherjee at a civil investiture ceremony at Rashtrapati Bhavan here on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X