For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபிகாவின் தலைக்கு ரூ. 5 கோடி விலை... கொலை மிரட்டலால் போலீஸ் பாதுகாப்பு

நடிகை தீபிகா படுகோனேவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெங்களூருவில் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    தீபிகாவின் தலைக்கு ரூ. 5 கோடி விலை... கொலை மிரட்டலால் போலீஸ் பாதுகாப்பு- வீடியோ

    பெங்களூரு: நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ.5 கோடி விலை வைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெங்களூருவில் உள்ள வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து 'பத்மாவதி' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

    இந்தப் படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராணி பத்மினியாக நடிகை தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜியாக நடிகர் ரன்வீர் சிங்கும், மஹரவால் ரத்தன் சிங்காக ஷாஹித் கபூரும் நடித்திருக்கிறார்கள்.

    தீபிகாவிற்கு மிரட்டல்

    தீபிகாவிற்கு மிரட்டல்

    பத்மாவதி படத்தை வெளியிடக்கூடாது என பல அமைப்புகள் படக்குழுவினருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வருகின்றன. பத்மாவதி படம் வெளியாவதை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தீபிகா படுகோனே தெரிவித்திருந்தார். இதனையடுத்து பகிரங்க மிரட்டல்கள் வருகின்றன.

    தீபிகாவிற்கு மிரட்டல்

    தீபிகாவிற்கு மிரட்டல்

    தீபிகாவின் இந்த அதிரடிப் பேச்சுக்காக ராஜபுத்திர கர்னி சேனா என்ற அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. படம் வெளியாகும் நாளன்று நாடு தழுவிய அளவில் பந்த் நடத்தப்படும் எனவும், சூர்ப்பனகை போல தீபிகாவின் மூக்கை வெட்டிவோம் என்று அறிவித்தனர்.

    தீபிகா தலைக்கு விலை

    தீபிகா தலைக்கு விலை

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சாத்ரிய சமோஜ் எனும் அமைப்பு, 'தீபிகா உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால், அவரது தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படும் என பகிரங்கமாக அறிவித்தது அந்த அமைப்பு.

    துப்பாக்கி ஏந்திய போலீஸ்

    துப்பாக்கி ஏந்திய போலீஸ்

    தீபிகாவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக பெங்களூருவில் தீபிகா படுகோனேவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபிகாவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.

    சித்தராமைய்யா ஆதரவு

    சித்தராமைய்யா ஆதரவு

    ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாரிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசினார். இதுகுறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், பாஜகவின் வெறுப்பு கலாசாரத்தை நான் கண்டிக்கிறேன். தீபிகா படுகோனே உலக அளவில் புகழ் பெற்ற நடிகை. அவருக்கு ஆதரவாக கர்நாடக அரசு நிற்கிறது என்று கூறியுள்ளார்.

    English summary
    We have set up a police picket outside Deepika Padukone's family residence here in JC Nagar,"said T Suneel Kumar, Commissioner, Bengaluru city police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X