For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீட்டாவுக்கு வசதியாக மாறியது மத்திய அரசின் சட்டம்.. இனி ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காளை மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசுவதை கூட மத்திய அரசின் புதிய விதிமுறை தடுத்து நிறுத்தியுள்ளது. இதன்படி பார்த்தால் இனிமேல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில், 1960ம் ஆண்டு, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனிமேல், மாடுகளைஇறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது.

இந்த விதிமுறையில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. பசு, காளை, ஒட்டகம், எருமைமாடு போன்றவற்றை சிறிதளவும் கொடுமைப்படுத்திவிட கூடாது என்பதே விதிமுறை சாராம்சம்.

விசித்திரம், வேதனை

விசித்திரம், வேதனை

இந்த அடிப்படையில் ஒரு விசித்திர விதிமுறையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதாவது பசு மற்றும் காளைகளின் கொம்புகளில் பெயிண்ட் அடிப்பது கூட குற்றம்தானாம். இவ்வாறு செய்வோருக்கு சிறை தண்டனை கூட கிடைக்கும்.

மழையில் மாடு நனையக் கூடாதாம்

மழையில் மாடு நனையக் கூடாதாம்

மாடுகளுக்கு அலங்காரம் செய்வது, ஆபரணங்கள் அணிவிப்பது (தமிழ் விவசாயிகளின் பாரம்பரிய வழக்கம் இது), ஆகியவற்றையும் அரசு தடை செய்துள்ளது. இந்த கால்நடைகளை வளர்ப்பவர் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மோசமான வானிலையில் இந்த கால்நடைகளை இருக்க விடக்கூடாது (அப்படியானால் வெயில், மழை காலத்தில் தொழுவத்தில் எப்படி மாடுகளை கட்டுவார்கள்?).

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

இப்படி விதிமுறைகளை அடுக்கிக்கொண்டே போகிறது மத்திய அரசு. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மழை, வெயில் கூட படாமல் மாட்டை பாதுகாக்க சட்டம் சொல்கிறதே அப்படியானால் அதை பிடித்து மேலே தொங்கியபடி அடக்கும் ஜல்லிக்கட்டு நிலைமை என்னவாகும்?

பீட்டாவுக்கு வாய்ஸ்

பீட்டாவுக்கு வாய்ஸ்

பெரும் போராட்டத்திற்கு பிறகு, ஜல்லிக்கட்டு சட்டத்தில் திருத்தம் செய்து அதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது மாநில அரசு. இதற்கு அப்போது மத்திய அரசும் ஒத்துழைத்தது. ஆனால் இப்போதைய சட்டத்திருத்தம் மூலம், இனிமேல் பீட்டா வாய்ஸ்தான் கோர்ட்டில் எடுபடும். ஆபரணம் கூட அணிவிக்க கூடாது என சட்டம் சொல்லும்போது மாட்டை தழுவ இனி பீட்டா விட்டுவிடுமா என்ன?

English summary
Painting the horns of cows and bulls has been declared illegal by the Union Government. The new rules have come into force under the Prevention of Cruelty to Animals Act of 1960.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X